- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இயக்குனரிடம் நான் ஒண்ணும் சிஎம் ஆக ஆசைப்படலே… ஓபனாக பேசிய நடிகர் அஜீத்குமார் -...

பிரபல இயக்குனரிடம் நான் ஒண்ணும் சிஎம் ஆக ஆசைப்படலே… ஓபனாக பேசிய நடிகர் அஜீத்குமார் – அப்போது நடந்தது என்ன?

- Advertisement -

நடிகர் விஜயும் நடிகர் அஜீத்குமாரும் சம காலகட்டத்தில் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர்கள். ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் அஜீத்குமார் விஜய் இருவருமே இணைந்து நடித்திருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு ரஜினி கமல் போல விஜய் அஜீத்குமாரும் சினிமா களத்தில் போட்டியாளர்களாக மாறிவிட்டனர்.

நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதித்த நிலையில் நடிகர் அஜீத்குமார் தொடர்ந்து படங்களில் நடித்து விஜய்க்கான வாய்ப்புகளை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் அவர் தனக்கான வாய்ப்புகளையே சரிவர பயன்படுத்தாமல் ஆண்டுக்கணக்கில் கார் ரேஸில் கலந்துக்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இதை பார்க்கும் ரசிகர்கள் ரஜினிக்கு 75 வயதாகி விட்டது. கமலும் அரசியலில் ஆர்வம் காட்டி ராஜ்யசபா எம்பி ஆகி விட்டார். அவருக்கும் 70 வயதுகளை தாண்டி விட்டது. விஜயும் ஜனநாயகன் படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லி விட்டார். அஜீத்குமாரும் கார் ரேஸ் பைக் ரேஸ் என்று போய்விடுகிறார். இப்படி உச்ச நட்சத்திரங்கள் 4 பேருமே தமிழ் சினிமாவில் பலத்த ஏமாற்றங்களை தருவதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. இவர் அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகர். மேலும் அஜீத்குமாரின் 50வது படமாக மங்காத்தா படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட்பிரபுவுக்கு அமைந்தது. மங்காத்தா பெரிய வெற்றியை தந்த போதும் மீண்டும் அஜீத்குமார் படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட்பிரபுவுக்கு கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் மங்காத்தா படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது, மங்காத்தா படத்தின் கதையை அஜீத் சார் கிட்ட நான் சொன்னபோது இந்த படத்துல உங்க கேரக்டர் ரொம்ப கெட்டவன். ரசிகர்கள் உங்களை வெறுக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன்.

உடனே அவர் நான் ஒண்ணும் சிஎம் ஆகணும்ன்னு ஆசைப்படலையே. நான் நடிகனா இருக்கணும்ன்னு தான் ஆசைப்படுறேன். எனக்கு நடிப்புல வேற வேற மாதிரி தீனி வேணும்ன்னு சொன்னார் என்று வெங்கட்பிரபு அதில் கூறியிருக்கிறார். இப்போது நடிகர் விஜய் தமிழகத்தின் அடுத்த முதல்வர் நான்தான் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் அஜீத் குமார் அன்று சொன்ன இந்த வெளிப்படையான கருத்து இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்