- Advertisement -
Homeபொழுதுபோக்குமேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கல்லை கூட கர்நாடகா அரசு எடுத்து வைக்க முடியாது -...

மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கல்லை கூட கர்நாடகா அரசு எடுத்து வைக்க முடியாது – காரணங்களை பட்டியலிட்டு சொன்ன இயக்குனர் சீனு ராமசாமி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. அவர் கண்ணே கலைமானே தர்மதுரை கோழிப்பண்ணை செல்லதுரை கூடல் நகர் மாமனிதன் நீர்ப்பறவை தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களை டைரக்ட் செய்து இருக்கிறார்.

இதில் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் இயக்குனர் சீனு ராமசாமி நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான முதல் படம் என்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்த நடிகை சரண்யா பொன்வண்ணன் சிறந்த துணை நடிகை தேசிய விருது பெற்றார்.

- Advertisement -

இதுவரை தமிழில் 7 படங்களை இயக்கியுள்ள சீனு ராமசாமி நல்ல படைப்புகளை தந்து சிறந்த இயக்குனராக ரசிகர்களிடம் கவனம் பெற்று இருக்கிறார். மேலும் அவ்வப்போது தனது எக்ஸ் பக்கத்தில் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த தனது கருத்துக்களையும் பதிவிட்டு இயக்குனர் சீனு ராமசாமி தனது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பதிவில் இன்று வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு இத்திட்டத்திற்கு இதுவரை பெறாத முக்கிய அனுமதிகள் குறித்து பட்டியலிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, வன அனுமதி – மத்திய வனத்துறையின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வன அனுமதிகள் பெறப்படவில்லை.

- Advertisement -

சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்கு அனுமதி – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதியும் பெறப்படவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – விரிவான திட்ட அறிக்கைக்கான ஒப்புதல் நிலுவையில் உள்ளது. தொழில்நுட்ப அனுமதிகள் – மத்திய நீர் ஆணையம், மத்திய மின்சார ஆணையம் ஆகியவற்றின் இறுதி தொழில்நுட்ப அனுமதிகள் இல்லை.

நீதிமன்ற வழக்குகள் – உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மற்றும் பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சூழலியல் அமைப்புகள் தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தனை சட்டபூர்வ அனுமதிகளையும் பெறாமல் கர்நாடகா அரசால் ஒரு செங்கல்ல கூட எடுத்து வைக்க முடியாது என்று இயக்குனர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பதிவில் உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்