நடிகர் ரஜினிகாந்த் பாட்ஷா படத்துக்கு பிறகு, தன்னுடைய இமேஜ் வேற லெவலுக்கு சென்ற பிறகு தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை செய்துக்கொண்டார். கேஎஸ் ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, ஷங்கர், கார்த்திக் சுப்பராஜா, சிறுத்தை சிவா, ஏஆர் முருகதாஸ் என தேர்வு செய்த இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்தார்.
இதில் தனது மகள் ஐஸ்வர்யா சிபாரிசு செய்ததால், பா ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடி்ததார். அந்த படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து காலா படத்திலும் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தார். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற மாஸ் ஹிட் படங்களை தந்ததால் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார்.
ஜெய்பீம் வெற்றிப் படத்தை கொடுத்த தசெ ஞானவேல் படத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். அதே போல் விக்ரம், கைதி வெற்றிப் படங்களை தந்ததால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.ஆக, வெற்றி இயக்குனர்களின் படங்களில் மட்டுமே ரஜினிகாந்த் தேர்வு செய்து நடிக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 10, 15 ஆண்டுகளில் நடித்த படங்களில் அதிகபட்சமாக ஒரு படத்துக்கு 40 முதல் 60 நாட்கள் வரை மட்டுமே கால்ஷீட் தருவது வழக்கம். அதற்குள் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட வேண்டும். சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பிறகு ரஜினி தொடர்ந்து அதிக நாட்கள் கால்ஷீட் தருவதில்லை.
ஆனால் எந்திரன், சிவாஜி படங்களில் நடித்த போது இயக்குனர் ஷங்கருக்கு மட்டும் அதிக நாட்கள் கால்ஷீட் தந்தார். ஏனெனில் ஷங்கர் பிரமாண்ட கதைகளை படமாக்குபவர் என்பதால் ரஜினி நடிக்கும் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவமும், அதிக கால அவகாசமும் தேவைப்பட்டது. அதனால் ஷங்கர் படங்களுக்கு ரஜினி அதிக நாட்கள் கால்ஷீட் தந்தார்.
அதே போல் இப்போது நடிகர் ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக லோகேஷ் கனகராஜூக்கு ரஜினிகாந்த் 100 நாட்களுக்கு மேல் கால்ஷீட் தந்திருக்கிறார். ஷங்கர் அளவுக்கு லோகேஷ் கனகராஜ் மீதும் ரஜினிக்கு அதீத நம்பிக்கை இருப்பதால் இப்படி அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி தந்திருக்கிறார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.





