- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் அமைத்திருப்பது சிம்பொனியா? - இசைஞானி இளையராஜா தந்த விளக்கம்!

இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் அமைத்திருப்பது சிம்பொனியா? – இசைஞானி இளையராஜா தந்த விளக்கம்!

- Advertisement -

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில், உலகின் தலைசிறந்த 80 இசைக் கலைஞர்களை கொண்ட ஆர்க்கெஸ்ட்ராவில், இசைஞானி இளையராஜா வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து சாதனை படைத்திருக்கிறார். தொடர்ந்து 13 நாடுகளில் இந்த சிம்பொனி வேலியன்ட் நிகழ்ச்சியை நடத்தவும் இளையராஜா திட்டமிட்டுள்ளார்.

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜா, எனக்கு 82 வயது ஆகி விட்டதே என்று நினைக்காதீர்கள், நீங்கள் நினைக்கும் அளவுக்குள் நான் இல்லை. இனிமேல்தான் ஆரம்பம். பண்ணைபுரத்தில் இருந்து நடந்து வந்த அதே கால்களில்தான் இப்போதும் நான் நிற்கிறேன். இன்னும் நிறைய சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கிறேன் என்றும் பேசியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சிம்பொனி குறித்து எழுந்த ஒரு சர்ச்சைக்கு இளையராஜா இப்போது விளக்கமும் தந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்தவர் லிடியன் நாதஸ்வரம். இவர் இளம் வயதிலேயே இசையில் சாதனை படைத்தவராக இருக்கிறார். மலையாள நடிகர் மோகன்லால் டைரக்ட் செய்த பரோஸ் என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர்.

இதற்கிடையே லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி அமைக்க இருப்பதாகவும் அவரை இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை அமைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் நேற்று பரவியது. ஆனால் இந்த தகவல் சரியானது இல்லை என்று இசைஞானி இளையராஜா மறுத்திருக்கிறார். லிடியன் அமைத்து இருப்பது சிம்பொனியா என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து இசைஞானி இளையராஜா கூறியதாவது, லிடியன் நாதஸ்வரம் என்னிடம் இசை கற்றுக்கொள்ள வந்தவர். ஒருமுறை நான் சிம்போனி கம்போஸ் பண்ணி இருக்கேன் என்று ஒரு இசையை எனக்கு போட்டுக் காட்டினார். 20 வினாடிகள் அதை நான் கேட்டுவிட்டு இது என்ன சினிமா பின்னணி இசை மாதிரி பண்ணி இருக்கிறாய், இது தப்பாச்சே என்றேன்.

இது சிம்பொனி இல்லை என்று அவரிடம் கூறினேன். மேலும் சிம்பொனி என்றால் என்ன என்று தெரிந்து கொள், அதன்பிறகு சிம்பொனி கம்போஸ் பண்ணு என்றும் அவருக்கு அறிவுறுத்தினேன். சினிமா பின்னணி இசை போன்ற ஒன்றை பண்ணிவிட்டு அதை என்னிடம் காட்டி ஒப்புதல் பெறுவதற்காக, எனது அங்கீகாரத்துக்காக லிடியன் நாதஸ்வரம் கொண்டு வந்தார். அது சிம்பொனி இல்லை, சிம்பொனி கற்றுக்கொள் என்று நான் அவருக்கு வழிகாட்டினேன் என்று இசைஞானி இளையராஜா விளக்கம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்