- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் மீண்டும் விவகாரம் செய்யும் இசைஞானி இளையராஜா, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது?...

மீண்டும் மீண்டும் விவகாரம் செய்யும் இசைஞானி இளையராஜா, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது? – அப்செட்டில் தயாரிப்பாளர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு இசைக் கலைஞராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த அவர் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பல மொழிகளில் தனது வித்தையை நிரூபித்தவர்.

இசைக்கலைஞராக யாராலும் குறை சொல்ல முடியாத இசைஞானியாக உள்ள இளையராஜா, தனிப்பட்ட முறையில் பலவிதமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருபவர். குறிப்பாக யாராக இருந்தாலும் அவர்களை எடுத்தெறிந்து பேசுவதில் இளையராஜா வல்லவர். யாரையும் மதிக்காத ஒரு தன்மையில் சில நேரங்களில் அவர் நடந்துக்கொள்வது பலருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

அதனால் இசையில் அவரை ரசித்த அளவுக்கு சிலரால் அவரது தனிப்பட்ட தன்மையை ஏற்க முடியவில்லை என்பது கசப்பான உண்மைதான். குறிப்பாக வைரமுத்து இளையராஜா இடையே ஏற்பட்ட கசப்பால், பல ஆண்டுகளாக நல்ல பாடல்களை இழந்துவிட்டோம் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இளையராஜா இசையில் பல ஆயிரம் பாடல்களை பாடி ஹிட் கொடுத்தவர் எஸ்பி பாலசுப்ரமணியம். அவரது இசைக் கச்சேரியில் இளையராஜா தனது இசையில் வெளியான பாடல்களை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடக் கூடாது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். எஸ்பிபி அவர் பாடிய பாடல்களையே பாடக் கூடாது. அது எனது இசையில் உருவானவை என்று இளையராஜா தடை விதித்தது யாராலும் ஏற்க முடியாததாக இருந்தது.

சமீபகாலமாக வரும் புதிய படங்களில் பழைய படங்களில் ஹிட் ஆன பாடல்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங் ஆகி வருகிறது. சில தினங்களுக்கு முன் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையில் வெளியான பாடல்களை பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பி ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார் இசைஞானி இளையராஜா.

மஞ்சும்மெல் பாய்ஸ் கூலி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இப்போது குட் பேட் அக்லி தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கும் இளையராஜா நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். விரைவில் தன் பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருக்கிறார். இளையராஜா இசையில் உருவான பாடல்களை பயன்படுத்த, அந்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் முறைப்படி அனுமதி பெற்றுதான், உரிய தொகை கொடுத்துதான் இப்படி பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இடையில் இசைஞானி செய்து வரும் இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

சற்று முன்