- Advertisement -
Homeபொழுதுபோக்குசர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் இளையராஜா, இந்த விஷயத்தில் கெத்து காட்டி விட்டாரே? - விரைவில் வெளியாகும்...

சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் இளையராஜா, இந்த விஷயத்தில் கெத்து காட்டி விட்டாரே? – விரைவில் வெளியாகும் அதிரடி அறிவிப்பு

- Advertisement -

இளையராஜாவை, தமிழ் சினிமாவில் இசைஞானி என்றுதான் அழைக்கின்றனர். அதில் யாரும் மாற்றுக்கருத்து சொல்ல முடியாது. உண்மையில் அவரது இசைக்கு மனம் மயங்காதவர்கள் யாருமில்லை. ஒரு முறை இளையராஜாவை சந்தித்த ஆட்டோ டிரைவர் ஒருவர், உங்கள் இசை மட்டும் இல்லை என்றால், என் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்றிருப்பேன் என்றாராம்.

அந்தளவுக்கு இளையராஜாவின் இசை கோபத்தில், வெறுப்பில், விரக்தியில், கவலையில், சோகத்தில் இருப்பவர்களை கூட ஆறுதலடையச் செய்கிறது. மனம் சோர்வாக இருந்தால், இளையராஜா பாடல்களை கேட்டால் உற்சாகமாகி விடும். மனம் விரக்தியில் இருந்தால், இளையராஜா இசை புது தெம்பை தந்துவிடும் என்பதெல்லாம் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி. அந்த படம்தான் அவரது தமிழ் சினிமாவின் அறிமுகமாக இருந்தது. அதன்பின், ஒரே நாளில் 10 படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு அவர், பிஸியான இசையமைப்பாளராக மாறிவிட்டார். ரெக்கார்டிங் தியேட்டரிலேயே வாழ்க்கையை பெரும்பகுதியை கழிக்கும் நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் கொண்ட இளையராஜாவை, ரஜினிகாந்த் சாமி என்றுதான் அழைக்கிறார். கமல்ஹாசன், இளையராஜாவிடம் ரஜினியை போல, எனக்கு நீங்கள் இசை தருவதில்லை என்று செல்லப்பிள்ளையாக கோவித்துக் கொள்வார். ரஜினி, ராமராஜன் என்ற வேறுபாடு எனக்கு கிடையாது. என்னுடைய பெரும்பாலான ஹிட் பாடல்கள், ராமராஜன் பட பாடல்கள்தான் என்பார் இளையராஜா.

ஆனால் அவ்வப்போது ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது இளையராஜாவுக்கு வாடிக்கை. அவர் ஏதோ பேச போக அது வேறுமாதிரியாக வடிவெடுத்து, சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை பெறுவது வழக்கமாகி விட்டது. ஆனால் இந்த முறை எந்த விமர்சனங்களுக்கும் சிக்காமல் ஒரு சிறந்த செயலை செய்ய தயாராகி விட்டார் இளையராஜா.

அதாவது தனது திரையுலக நீண்டகால நண்பரான பாரதிராஜாவுக்காக, இளையராஜா சொந்தமாக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறார். அதன்மூலம் கிடைக்கும் பெரும் தொகையை பாரதிராஜாவுக்கு வழங்க இருக்கிறார். இந்த இசை விழாவில் ரஜினி, கமல் போன்ற பெரிய ஜாம்பவான்களையும் அழைக்க திட்டமிட்டுள்ளார். பொருளாதார ரீதியாக சிரமத்தில் உள்ள தன் நண்பருக்காக, தன் நட்புக்காக இதை இளையராஜா செய்கிறார். விரைவில் அறிவிப்பு வரலாம் என தெரிகிறது.

சற்று முன்