- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு வருமானமே இல்லே… பேசாம மறுபடி நடிக்க போயிடுறேன் - மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி...

எனக்கு வருமானமே இல்லே… பேசாம மறுபடி நடிக்க போயிடுறேன் – மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பரபரப்பு பேச்சு!

- Advertisement -

அமைச்சர் ஆனபிறகு எனக்கு வருமானமே இல்லை. என் பதவியை ராஜ்யசபா எம்பி ஆகியிருக்கிற சதானந்தம் என்பவருக்கு கொடுத்துவிடுங்கள். நான் திரும்பவும் சினிமாவில் நடிக்கப் போய்விடுகிறேன் என்று கண்ணூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணையமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி பேசியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சுரேஷ் கோபி, பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். தமிழில் தீனா ஐ சமஸ்தானம் தமிழரசன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் மணிசித்ரதாழ் என்ற பெயரில் உருவான படம் தமிழில் சந்திரமுகி என ரீமேக் செய்து வெளியானது. இதில் பிரபு நடித்த கேரக்டரில் மலையாளத்தில் நடித்திருந்தது சுரேஷ் கோபிதான்.

- Advertisement -

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சதானந்தன் ராஜ்யசபா உறுப்பினராகி உள்ளார். அவருக்காக கண்ணூரில் புதிதாக அமைக்கப்பட்ட எம் பி அலுவலகம் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் நடிகர் சுரேஷ்கோபி கலந்துகொண்டு அந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அந்த விழாவில் நடிகர் அமைச்சர் சுரேஷ்கோபி பேசியதாவது, சதானந்தன் மாஸ்டர் அலுவலகம் விரைவில் மத்திய அமைச்சர் அலுவலகமாக மாற வாழ்த்துகிறேன். என்னை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அதில் எனக்கு பதிலாக சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக நியமித்தால் மகிழ்ச்சி அடைவேன். இது கேரளா அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும்.

- Advertisement -

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய நான் லோக்சபா தேர்தலின் போது மக்கள் அளித்த தீர்ப்பை அங்கீகரிக்கும் விதமாக என்னை கட்சி மேலிடம் மத்திய அமைச்சராக்கி இருக்கலாம். ஆனால் எனது திரைப்பட வாழ்க்கையை விட்டுவிட்டு நான் ஒருபோதும் அமைச்சராக இருக்க விரும்பவில்லை. சமீபத்திய காலங்களில் எனது வருமானம் கணிசமாக குறைந்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் நடிகர் சுரேஷ்கோபி அந்நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

மத்திய இணையமைச்சராக பதவி வகிக்கும் அவர் சினிமாவில் நடித்தால் கோடிக்கணக்கில் வருமானம் வரும், அதை நான் அமைச்சராகி விட்டதால் இழந்து விட்டேன் என்கிறாரா, அல்லது மத்திய இணையமைச்சராக இருந்தும் என்னால் பெரிய அளவில் சம்பாதிக்க முடியவில்லை என்று மறைமுகமாக வருத்தப்படுகிறாரா என்று அவர் பேசியது விவாதிக்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்