- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் மீது வெறுப்பை கொட்டிய இளையராஜா, கூலி டீசருக்கு பின்னால் நடந்த திடுக் சம்பவங்கள்...

லோகேஷ் கனகராஜ் மீது வெறுப்பை கொட்டிய இளையராஜா, கூலி டீசருக்கு பின்னால் நடந்த திடுக் சம்பவங்கள் – கொதித்துப் போன நடிகர் கமல்ஹாசன்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து கூலி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்கத்தின் ரஜினி 171 என்று கூறப்பட்ட இந்த படத்துக்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் கூலி என்ற டைட்டிலுடன் வெளியானது. இந்த டைட்டிலில் அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்ற வசனத்தை பேசி ரஜினிகாந்த் மாஸ் காட்டி இருந்தார். பிளாக் அண்ட் வொயிட்டில் ஒரு குடோனுக்குள் தங்கத்தை பதுக்கி வைத்திருக்கும் கூட்டத்துடன் ரஜினிகாந்த் சண்டை போடுவது போன்ற ஒரு வேற லெவல் சண்டைக்காட்சியுடன் டீஸர் வெளியிடப்பட்டது.

- Advertisement -

அந்த டீசரில் வா வா பக்கம் வா என்ற பக்கம் வர வெக்கமா என்ற தங்கமகன் படத்தில் இடம்பெற்ற பாடலில், டிஸ்கோ என்ற பிஜிஎம் இசையுடன் அந்த டீசர் வெளியாகி இருந்தது. நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் எனக்கே சொந்தம் என கூறி வரும் இசைஞானி இளையராஜா இதையடுத்து உச்சகட்ட கோபமடைந்தார்.

இதையடுத்து, இசைஞானி இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் உங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் கூலி படத்தின் டீசரில் என்னுடைய இசை அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நீங்கள் என்னிடம் உரிய அனுமதி பெறாததால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு எனக்கு சகலவிதமான உரிமைகளும் உண்டு என்று நோட்டீஸில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் அந்த நோட்டீஸில், இயக்குனர் லோகேஷ் கனகராஜை இளையராஜா கண்டபடி திட்டி வெறுப்பை காட்டியிருக்கிறார். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தனது படங்களில் எனது இசையை பயன்படுத்தி வருகிறார். அவர் தயாரித்த நைட் கிளப் என்ற படத்தில் என்னுடைய இசை பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்ரம் படத்தில் என்னுடைய விக்ரம் விக்ரம் பாடல் இசையை அவர் பயன்படுத்தி உள்ளார் என்றும் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டியிருக்கிறார்.

35 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த விக்ரம் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், அந்த படத்தின் கதாநாயகனும் கமல்ஹாசன்தான். அவரே தயாரித்த, அவரே கதாநாயகன் நடித்த படத்தில், அவர் பயன்படுத்திய அந்த பாடலை மீண்டும் அதே பெயரில் எடுக்கப்பட்ட விக்ரம் படத்தில், அவரே நடிக்கும் போது அதை பயன்படுத்தக்கூடாதா என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இளையராஜாவுக்கு என்னதான் ஆச்சு என நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்