ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் இவர்கள் மூவரும்தான் இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருந்து வருகின்றனர். கமல்ஹாசனும் இந்த லிஸ்ட்டில் இருந்தாலும், அவரை பொறுத்தவரை அரசியலிலும் இருப்பதால் சினிமாவில் பெரிய அளவில் அவரது பங்களிப்பு இப்போதைக்கு இல்லை.
அதுவும் கமல் நடித்த விக்ரம் படம் வெளிவந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், கமலுக்கு அடுத்த படம் இன்னும் வெளிவரவில்லை. இந்தியன் 2 படம் ஜூன் மாதம் 13-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் கமல் நடித்து வருகிறர்.
ரஜினி, அஜித், விஜயை பொருத்தவரை அவர்கள் படத்தின் நடிக்கும் வில்லன் நடிகர்கள், அந்த படத்துக்கு மிகப்பெரிய பலமாகவும் பிளஸ் பாயிண்டாகவும் இருப்பார்கள். அதனால் நடிகர் ரஜினிகாந்த் படங்களில் வில்லனாக நடிப்பவர்களை, மாஸ் வில்லன்களாக தான் இருப்பவர்கள். அதேபோல் விஜய் படங்களிலும், அஜித்குமார் படங்களில் நடிக்கும் வில்லன் நடிகர்கள் முக்கியமான இடத்தில் இருப்பவர்களாக இருப்பார்கள்.
நடிகர்கள் ரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ், சஞ்சய் தத், விஜய் சேதுபதி, சோனா சூட் போன்றவர்கள் வில்லன் நடிப்பில் அசத்தி விடுகிறார்கள். அதில் ஒருவர்தான் இப்போது பிரபலமான வில்லன் நடிகராக உள்ள ஜெகபதி பாபு. தெலுங்கில் முன்பு கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் வில்லனாக மாறினார். தெலுங்கில் மட்டுமே முதலில் வில்லனாக நடித்தவர் பிறகு மற்ற மொழிகளிலும் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்துக்கு வில்லனாக லிங்கா, அண்ணாத்த ஆகிய படங்களில் வில்லனாக ஜெகபதி பாபு நடித்திருந்தார். அதேபோல் நடிகர் விஜய்க்கு பைரவா படத்தில் வில்லனாக ஜெகபதி பாபு நடித்திருந்தார். அதேபோன்று நடிகர் அஜித் குமாருக்கு, விஸ்வாசம் படத்தில் ஜெகபதிபாபு தான் வில்லனாக இருந்தார்.
ஆனால் ரஜினியுடன் ஜெகபதி பாபு நடித்த லிங்கா, அண்ணாத்த இரண்டு படங்களுமே தோல்வியை தழுவியது. அதேபோல் விஜயுடன் நடித்த பைரவா படமும் சரியாக ஓடவில்லை. ஆனால் விஸ்வாசம் படம் பெரிய அளவில் ஹிட் ஆகி, ஜெகபதிபாவுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கி தந்தது. அதனால் ரஜினி, விஜய் ஆகியோரை விட வில்லன் கேரக்டருக்கு தமிழில் எனக்கு சிறந்த படமாக அமைந்தது விஸ்வாசம்தான். அந்த வகையில் ரஜினி, விஜயை விட எனக்கு லக்கி ஸ்டார் நடிகர் அஜித்குமார் தான் என்று அவர் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, அஜித்குமாருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.





