- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா விரும்பாத கேரக்டர்களை அவரது பயோபிக் படத்தில் கொண்டு வருவது எப்படி?, ஏஐ தொழில்நுட்பம் இல்லே...

இளையராஜா விரும்பாத கேரக்டர்களை அவரது பயோபிக் படத்தில் கொண்டு வருவது எப்படி?, ஏஐ தொழில்நுட்பம் இல்லே – ஆனா இது வேற லெவல்

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இந்த படத்தை மும்பையை சேர்ந்த பெரிய நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது. இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இளையராஜா படத்துக்கு இளையராஜாவே இசையமைக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதுகிறார்.

இளையராஜா படத்தை டைரக்ட் செய்வது கேப்டன் மில்லர் படத்தை டைரக்ட் செய்த அருண் மாதேஸ்வரன் என்பதுதான் பலருக்கும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களை தந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இளையராஜாவின் உயிரோட்டமான அவரது வாழ்வியலை எப்படி படமாக உருவாக்கி தரப் போகிறார் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

- Advertisement -

இளையராஜா வாழ்க்கையை பொருத்த வரை அவரது வளர்ச்சியிலும், அவரது வாழ்க்கை பயணத்திலும் சில முக்கிய திரை பிரபலங்கள் உடனிருந்தனர். குறிப்பாக அவரது சகோதரர் கங்கை அமரன், இளையராஜாவின் நிழலாக ஒரு காலகட்டத்தில் இருந்தவர். அதே போல் கவிஞர் வைரமுத்துவும் இளையராஜாவும் உருவாக்கிய பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களும் கொண்டாடும் பாடல்களாக இருக்கின்றன.

அதனால் இளையராஜாவின் பயோபிக் படத்தில் கங்கை அமரன், வைரமுத்து, பாரதிராஜா, இளையராஜாவின் மறைந்த சகோதரர் பாஸ்கர் என பலரையும் கொண்டு வர வேண்டும். வைரமுத்து, கங்கை அமரனை படத்தில் கொண்டு வர வேண்டும். பாரதிராஜா தற்போது அடிக்கடி உடல் நலமின்றி அவதிப்படுகிறார். முதுமையான காலகட்டத்தில் அவரால் ஷூட்டிங் வருவதும் சிரமம் இருக்கிறது.

- Advertisement -

இதையடுத்து இளையராஜா பயோபிக் படத்தில் ஒரு புதிய பிளான் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான இப்போது படக்குழு சார்பில் தனித்தனி நபர்கள் ஆடிஷன் குரூப் ஆடிஷன் என படத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள் என தேர்வு வேகமாக நடந்து வருகிறது. இதில் புதிய டிவிஸ்ட் ஒன்று ஒளிந்திருக்கிறது.

இந்த ஆடிஷனில் கலந்துக்கொள்பவர்களில் வைரமுத்து, பாரதிராஜா, கங்கை அமரன், ஏஆர் ரகுமான், பாஸ்கரன் போன்ற முகச்சாயலும், தோற்றமும் கொண்ட மனிதர்களை தேர்வு செய்ய உள்ளனர்.அவர்களை இளையராஜா படத்தில் வைரமுத்துவாக, கங்கை அமரனாக, பாரதிராஜாவாக காட்ட திட்டமிட்டுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தில் காட்டினால் அது போலியாக தெரியும் என்பதால், அவர்களது உருவங்களை கொண்ட நடிகர்களை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்