- Advertisement -
Homeபொழுதுபோக்குவெளியில் சொல்ல முடியாத துரோகம், ஏத்துக்கவே முடியாத வலி, ரணத்தை தந்தவர் சிவகார்த்திகேயன் - இசையமைப்பாளர்...

வெளியில் சொல்ல முடியாத துரோகம், ஏத்துக்கவே முடியாத வலி, ரணத்தை தந்தவர் சிவகார்த்திகேயன் – இசையமைப்பாளர் இமான் வேதனை

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனம் பிடித்த ஒரு முக்கிய இளம் நடிகர். பக்கத்து வீட்டு பையன் போல தெரிகிறார் என்ற சிநேகமான அவரது தோற்றமும், பேச்சுமே பலருக்கும் எளிதில் அவரை பிடித்துப் போக காரணமானது. இதுவரை எந்தவிதமான சர்ச்சை, விமர்சனங்களில் சிக்காமல் இருந்த சிவகார்த்திகேயனின் நிலைமை, தலைகீழாக மாறிவிட்டது.

அதற்கு சமீபத்தில் இசையமைப்பாளர் டி இமான் கொடுத்த ஒரு நேர்காணல்தான் மிக முக்கிய காரணம். அதைவிட, சிவகார்த்திகேயன் இந்தளவுக்கு சினிமாத்துறையில் இருந்தது அவர் நடித்த படங்கள். அந்த வகையில், அவரது மெகா ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் இமான்தான். ஊரைக் காக்க உண்டான சங்கம் என, சிவகார்த்திகேயன் முதன்முதலில் பாடியதும் இமானின் இசையில்தான்.

ஒரு காலகட்டத்தில், சினிமாவை தாண்டி இமான் குடும்பத்தில் ஒருவராக பழகி வந்த சிவகார்த்திகேயன் படங்களுக்கு, சில ஆண்டுகளாக இமான் இசையமைக்கவில்லை. ஏனெனில் மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீம ராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற படங்களுக்கு இசையமைத்தது இமான் என்பதால், அந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டன.

சிவகார்த்திகேயனுடன் இருந்த நட்பு, இப்போதைய நிலை குறித்து நேர்காணலில் இசையமைப்பாளர் இமான் கூறியதாவது, சிவகார்த்திகேயன், கடுமையான உழைப்பால் முன்னுக்கு வந்தவர். மெரினா படம் ரிலீசாகாத நிலையில், மனம் கொத்திப் பறவை படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என டைரக்டர் எழில், நான், யுகபாரதி மூவரும் பேசிக்கொண்டு இருந்த போது, அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்ற சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தோம்.

அவர் நடித்த படங்களுக்காக, நான் ஆத்மார்த்தமாக பணிசெய்து, நல்ல இசையை, பாடல்களை உருவாக்கி தந்தேன். ஆனால், அவர் நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய துரோகத்தை எனக்கு செய்துவிட்டார். வெளியில் சொல்லவே முடியாத ஒரு துரோகத்தை அவர் எனக்கு செய்துவிட்டார். என்னால் ஏத்துக்கொள்ளவே முடியாத வலியை, வேதனையை அவர் தந்துவிட்டார். இனிமேல், எப்போதும் அவருடன் என்னால் பயணிக்க முடிகயாது.

என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, சில விஷயங்களை நான் வெளியில் சொல்லாமல் நான் மறைக்கிறேன். எனக்கு ஏற்பட்ட எல்லா பிரச்னைகளுக்கும் சிவகார்த்திகேயன் மட்டுமே காரணம் அல்ல. ஆனால், அவரும் அதில் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார். ஏன் அவரும் நீங்கள் சேர்ந்து பணியாற்றுவதில்லை என தொடர்ந்து வரும் கேள்விகளை தவிர்க்கவே, அவர் துரோகம் செய்து விட்டார் என்பதை சொல்கிறேன். இதை நான் மிக தாமதமாகவே தெரிந்துக்கொண்டேன் என்று கூறி இருக்கிறார் இமான்.

சற்று முன்