- Advertisement -
Homeபொழுதுபோக்குவாடிவாசல் படத்தை கைவிட்ட நடிகர் சூர்யா… தாணு தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க தயார் -...

வாடிவாசல் படத்தை கைவிட்ட நடிகர் சூர்யா… தாணு தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க தயார் – இயக்குனர் குறித்து வெளியான புதிய தகவல்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ. கடந்த மே 1ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் அந்த படத்தில் நடிப்பதில் சூர்யாவுக்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அந்த படம் டிராப் ஆகி விட்டது. வாடிவாசல் படத்தில் 2ம் பாகம் கூடாது, படம் எப்போது துவங்கி எப்போதும் முடிப்பீர்கள் என்பதை அக்ரிமென்டில் குறிப்பிட வேண்டும் என சில கண்டிசன்களை சூர்யா போட்டதால் வெற்றிமாறன் பின்வாங்கி விட்டார்.

- Advertisement -

ஏனென்றால் வாடிவாசல் 2ம் பாகமாக உருவாகுமா, இல்லையா என்பதை வெற்றிமாறன் இன்னும் தீர்மானிக்கவில்லை. படத்தின் கதை போகிற போக்கில், 2ம் பாகம் வரலாம் வராமலும் போகலம் என்ற மனநிலையில்தான் அவர் ஒவ்வொரு படத்தையும் எடுப்பது வழக்கம். அதே போல் இந்த தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்கும் வழக்கமும் வெற்றிமாறனுக்கு இல்லை.

இந்த காரணங்களால் வாடிவாசல் டிராப் ஆன நிலையில், தயாரிப்பாளர் எஸ் தாணுவுக்கு வெற்றிமாறன் ஒரு படம் இயக்க வேண்டும். சூர்யாவும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இந்த சூழலில் தாணு தயாரிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்க, அதில் சிலம்பரசன் நடிக்கிறார். இந்த படம்தான் வடசென்னை படத்தின் கிளை கதையாக உருவாகிறது.

- Advertisement -

அதே போல் நடிகர் சூர்யாவும் தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதான் சூர்யாவின் 47வது படமாக உருவாகிறது. மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற படம் ஆவேசம். இந்த படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன்தான் சூர்யா 47 படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா இப்போது ஆர்ஜே பாலாஜியின் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். இது அவரது 45வது படம். இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கிறார். இது சூர்யாவின் 46வது படம். ஜித்துமாதவன் இயக்கும் படம் சூர்யா 47 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்