- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் பண்ணிட்டார்... அவருடன் இனி ஒருபோதும் சேர மாட்டேன்... பிரபல இசையமைப்பாளர் பகீர்...

சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் பண்ணிட்டார்… அவருடன் இனி ஒருபோதும் சேர மாட்டேன்… பிரபல இசையமைப்பாளர் பகீர் குற்றச்சாட்டு… அதிர்ச்சியில் கோலிவுட்…

- Advertisement -

சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்து, இன்று பலரும் வியக்கும் வகையில் உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அது இது எது நிகழ்ச்சியின் மூலம், தமிழ்நாட்டில் ஒவ்வொரு இல்லங்களுக்கும் நுழைந்த அவர், தனது டைமிங் காமெடியால் பலரையும் ரசிக்க வைத்தார்.

சிவகார்த்திகேயனின் குறும்புத்தனமும், காமெடி நுண்ணறிவும் அவரை வெள்ளி திரைக்கு அழைத்துச் சென்றது. ஆரம்பத்தில் 3 மற்றும் மெரினா ஆகிய திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்க, அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் சிவகார்த்திகேயன். இரண்டு திரைப்படங்களிலும் சிவகார்த்திகேயனின் காமெடி காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டன.

இதன் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் தொடங்கி வெற்றிப்பாதையில் சென்ற அவர் இப்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக வளர்ந்து இருக்கிறார். இப்படியான சூழலில் தான் இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அவர், இந்த ஜென்மத்தில் நானும் சிவகார்த்திகேயனும் சேர்ந்து பயணிப்பது மிகப்பெரிய கஷ்டம். அவர் எனக்கு செய்த மிகப்பெரிய துரோகத்தை வெளியில் சொல்ல முடியாது. இதனால் எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க முடியாது. அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்து அவர் நடிகராக இருந்தால் இது நடக்கலாம்.

அவர் செய்த துரோகம் எனக்கு மிக தாமதமாகதான் தெரிந்தது. சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை நான் அவரிடம் நேரிலேயே கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் என்ன பதில் கூறினார் என்பதை நான் இங்கு கூற முடியாது. சில விஷயங்களை நான் மறைக்கிறேன் என்றால் அது குழந்தைகளின் எதிர்காலமே காரணம் என்று பேசியுள்ளார். இமானின் இந்த குற்றச்சாட்டு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீம ராஜா, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இமான்தான் இசையமைத்திருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் எஸ்.கே-வின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற இமான், தற்போது அவரைப் பற்றி குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். அதேசமயம் இந்த விஷயத்தில் இரண்டு பக்கத்தையும் பார்க்க வேண்டும் என்றும், சிவகார்த்திகேயன் தரப்பு பதில் கூறினால் தான் இதில் உண்மை என்ன என்பது தெரியவரும் என்றும் இணையத்தில் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்