- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது என்ன காம்போன்னே தெரியலையே, அவர்தான் ரஜினிக்கும் வில்லனா? - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் போடுற...

இது என்ன காம்போன்னே தெரியலையே, அவர்தான் ரஜினிக்கும் வில்லனா? – டைரக்டர் லோகேஷ் கனகராஜ் போடுற கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படப்பிடிப்பு வரும் மே 1ம் தேதி சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பட பூஜை துவக்க விழாவுடன் துவங்குகிறது. சென்னையை தொடர்ந்து ஐதராபாத்திலும் அதன்பிறகு ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தசெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரடக்சன் தயாரிப்பில் இப்போது ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இந்த படம் குறித்த ஆர்வத்தை காட்டிலும், இன்னும் படப்பிடிப்பே துவங்காத ரஜினி 171 படம் குறித்துதான் ரசிகர்கள் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர்.

இந்த படத்துக்கு கழுகு அல்லது ஈகிள் என பெயர் வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த டைட்டில் குறித்த அறிவிப்பு, வரும் 22ம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது. முதலில் தமிழ் புத்தாண்டு அன்றுதான் இந்த பிரமோவை லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்தார். ஆனால், அன்று விஜய் நடித்த கோட் படம் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாவதால், இதை 22ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார்.

இந்நிலையில் ரஜினி 171 படத்தில் நடிக்கக் கூடிய நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழில் பல படங்களில் நடித்து அசத்தியவர் ஷோபனா. குறிப்பாக இது நம்ம ஆளு, தளபதி, சிவா, பாட்டுக்கு ஒரு தலைவன், பொன்மனச் செல்வன், மல்லுவேட்டி மைனர் போன்ற படங்களில் நடித்தவர்.

ஏற்கனவே ரஜினியுடன் தளபதி, சிவா படங்களில் நடித்த ஷோபனா இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுதவிர ரன்வீர் சிங், மாஸ்டர் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், ஜீவன் போன்றவர்களும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் மெயின் வில்லன் கேரக்டரில் நடிகர் மைக் மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில், விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். 1980களில் முக்கிய நாயகனாக இருந்த மோகனை, ரஜினிக்கும் வில்லனாக நடிக்க வைக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்க்கு வில்லனாக கோட் படத்தில் மோகன் நடித்ததற்கே ரசிகர்களிடம் என்ன ரிசல்ட் கிடைக்கும் என தெரியாத நிலையில், இது என்ன புது கணக்கு என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சற்று முன்