- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி 50 பொன்விழா ஆண்டில் ரிலீஸ் ஆகும் 2 படங்கள், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வெயிட்டா...

ரஜினி 50 பொன்விழா ஆண்டில் ரிலீஸ் ஆகும் 2 படங்கள், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வெயிட்டா காத்திருக்கு – படங்கள் ரிலீஸ் எப்போன்னு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படம், அடுத்த மாதம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தசெ ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா ப்ரொடக்சன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியார் ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வேட்டையன் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் நாகார்ஜுனா சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை விசாகப்பட்டணம் ஆந்திரா ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது.

- Advertisement -

கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ஏற்கனவே 2023ம் ஆண்டில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக 2ம் பாகம் உருவாகிறது. இந்த படத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் மற்றும் சுனில் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்த மோகன்லால், ஜாக்கி செராப், சிவராஜ்குமார் போன்றவர்களுக்கு போதிய காட்சிகள் இல்லாததால் இந்த படத்தில் கூடுதலான காட்சிகள் தந்து அவர்களுக்கான கேரக்டரை இன்னும் பலமாக உருவாக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் 50வது ஆண்டு பொன்விழா அடுத்த ஆண்டு வருகிறது. அதாவது 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமானார். அடுத்த 2025ம் ஆண்டில் அவரது தமிழ் சினிமா பயணத்தில் தனது 50வது பொன்விழா ஆண்டை கொண்டாடுகிறார். எனவே அந்த ஆண்டின் சிறப்பம்சமாகரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகிறது. அதற்காக கூலி படத்தின் படப்பிடிப்பிலும், தொடர்ந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பும் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடிக்க இருக்கிறார்.

இப்போது அந்த படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் தெரிய வந்துள்ளது. அதன்படி கூலி படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி ரிலீசாக திட்டமிட்டிருந்த நிலையில், இப்போது கூலி படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் ஜெயிலர் 2 படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் கூலி, ஜெயிலர் 2 ஆகிய இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்க திட்டமிட்டுள்ளார். அக்டோபர் மாத இறுதிக்குள் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்