- Advertisement -
Homeபொழுதுபோக்குசேனாதிபதி தாத்தா வருகைக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு... இந்தியன் 2 வில் தரமான அப்டேட்களை வைத்திருக்கும்...

சேனாதிபதி தாத்தா வருகைக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு… இந்தியன் 2 வில் தரமான அப்டேட்களை வைத்திருக்கும் இயக்குனர் ஷங்கர்…

- Advertisement -

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் சங்கர். ஜென்டில்மேன் திரைப்படத்தில் தொடங்கி காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.ஓ என வெற்றிப் படங்களை அவர் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் இயக்குனராகவும் அவர் வலம் வருகிறார்.

தனது படத்தில் காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் கொடுக்கும் சங்கர், 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் மூலம் இந்திய திரை உலகம் போற்றும் இயக்குனர்களில் ஒருவரானார். சுதந்திர காலகட்டத்தில் போராடிய ஒருவர், இப்போதைய லஞ்சத்தை எதிர்த்து என்னவெல்லாம் செய்கிறார் என்ற ஒரே ஒரு வரியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

- Advertisement -

படத்தில் சேனாதிபதியாக வாழ்ந்த கமல்ஹாசன், படம் முழுக்க தான் நடிகர் என்பதை எங்கும் தெரியாதபடி வாழ்ந்ததால் தேசிய விருதை தட்டிச் சென்றார். இயக்குனர் சங்கருக்கு மிகப்பெரிய பெயரை இந்த திரைப்படம் வாங்கி கொடுத்தது. இதைத்தொடர்ந்து, அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் முனைப்பு காட்டினார்.

இதற்கான பணிகள் 2017 ஆம் ஆண்டிலேயே தொடங்க, வேலைகள் வேகமெடுக்க ஆரம்பித்தன. லைக்கா நிறுவனம் இதனை தயாரிக்க, சித்தார்த், காஜா அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம், நெடுமுடி வேணு, விவேக், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம் என ஏராளமான நட்சத்திரங்கள் இடம்பெற்றனர். அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

- Advertisement -

இதனிடையே படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, சங்கருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை செல்ல, பிறகு இருவரும் வேலையை தொடர ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இந்தியன் 2 திரைப்படத்தின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சேனாதிபதி தாத்தாவின் பேரனாக சித்தார்த் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் படத்திற்கான கதைக்களத்தை எவ்வாறு சங்கர் எடுத்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. முக்கியமாக சேனாதிபதி தாத்தா கதாபாத்திரத்தை பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ வரும் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்