- Advertisement -
Homeபொழுதுபோக்குதிமுக ஆதரவாளரான கமல்ஹாசனுக்கே இப்படி ஒரு நிலமையா? இதுல விஜய்க்கு கொடுத்த முக்கியத்துவம் கூட ஆண்டவருக்கு...

திமுக ஆதரவாளரான கமல்ஹாசனுக்கே இப்படி ஒரு நிலமையா? இதுல விஜய்க்கு கொடுத்த முக்கியத்துவம் கூட ஆண்டவருக்கு இல்லையா? – ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு….

- Advertisement -

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன், ஒரு திரைப்பட கலைஞனாக செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை. தமிழ் சினிமாவை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்ற மிக முக்கியமான திரைக்கலைஞர் கமல் என்றால் அது மிகையல்ல. நடிப்பிலும், தொழில்நுட்பத்திலும் தமிழ் சினிமா இன்று மிகப்பெரிய எல்லைகளை கடந்து நிற்க நடிகர் கமல்ஹாசன் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் நாளை வெளியாகிறது. 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக, இந்த படம் இரண்டாம் பாகமாக நாளை வெளியாகிறது. இந்த படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கியிருக்கிறார். லைகா புரொடக்சன் தயாரித்து இருக்கிறது.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு போன்றவர்கள், ஏஐ தொழில்நுட்பத்ததில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தியன் 2 படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 3 படமும் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நாளை இந்தியன் 2 படம் வெளியாகும் சூழலில் இந்த படத்துக்கு சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தது. அந்த வகையில் இந்தியன் படத்தை நாளை ஒரு நாள் மட்டும், ஒரே ஒரு சிறப்பு காட்சி நடத்திக் கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கும் பல நிபந்தனைகளை விதித்து, இந்த அனுமதியை அளித்துள்ளது.

காலை 9 மணிக்குத் தான் முதல் காட்சியை தொடங்க வேண்டும், நள்ளிரவு 2 மணிக்குள் கடைசி காட்சியை முடித்துவிட வேண்டும், அதிகபட்சமாக ஒரு திரையில் ஐந்து காட்சிகள் மட்டுமே ஒரு நாளில் திரையிட வேண்டும், உரிய போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையே ஒரு இல்லாத வகையில் ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த மிகப் பிரமாண்டமான படத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே சிறப்பு காட்சி என தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் 19ல் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து 5 சிறப்பு காட்சிகள் அதாவது தினமும் ஒரு காட்சி சிறப்பு காட்சி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் திமுக ஆதரவாளரான நடிகர் கமல்ஹாசனின் படத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே, ஒரு சிறப்பு காட்சி அனுமதிக்கப்பட்டிருப்பது கமல் ரசிகர்களை நொந்து போகச் செய்திருக்கிறது.

சற்று முன்