- Advertisement -
Homeபொழுதுபோக்குலைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கர் இடையே இந்தியன் தாத்தாவால் ஏற்பட்ட பஞ்சாயத்து - கேம் சேஞ்சர்...

லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கர் இடையே இந்தியன் தாத்தாவால் ஏற்பட்ட பஞ்சாயத்து – கேம் சேஞ்சர் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!

- Advertisement -

கடந்த 1998ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார். சேனாபதி கேரக்டரில் இந்தியன் தாத்தாவாக நடித்த கமலுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது.

இந்த படத்தின் தொடர்ச்சியாக 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 படம் வெளியானது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம் கமல் இந்தியன் தாத்தா கேரக்டரில் மீண்டும் திரையில் வந்தார். சித்தார்த் பாபி சிம்ஹா எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த இந்தியன் 2 படம் பலத்த தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்த சூழலில் இப்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படம் வருகிற ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. ராம் சரண் கியாரே அத்வானி எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருக்கிறார்.

கேம் சேஞ்சர் படத்துக்கு பிறகு இந்தியன் 3 படம் வெளியாக உள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பின்போதே இந்தியன் 3 படமும் 70 சதவீதம் உருவாகி விட்ட நிலையில், இன்னும் மீதி ஒரு மாத காலம் வரை படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி உள்ளது. அதற்காக இயக்குனர் ஷங்கர், லைகா நிறுவனத்திடம் தனது சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவு உள்பட 60 கோடி முதல் 80 கோடி ரூபாய் வரை கேட்டிருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே இந்தியன் 2 படம் பலத்த நஷ்டத்தை எங்களுக்கு தந்துவிட்டது. அதனால் இந்தியன் 3 படத்துக்கு உங்கள் சம்பளத்தை விட்டுக்கொடுங்கள். மேலும் படத்தின் தயாரிப்பு செலவுக்கான பணத்தை தந்துவிடுகிறோம். அதே போல் இந்தியன் 3 படத்தை எடுத்த வரை எங்களுக்கு போட்டுக் காட்டுங்கள் என்றும் லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கரிடம் கேட்டுள்ளது.

இதற்கு இயக்குனர் ஷங்கர் சம்மதிக்கவில்லை. இதுவரை நான் இயக்கிய எந்த படத்தையும் இப்படி தயாரிப்பு நிறுவனத்துக்கு போட்டு காட்டியது இல்லை. அப்படி ஒரு பழக்கமே என்னிடம் இல்லை. என் சம்பளத்தையும் விட்டுத் தர முடியாது. ஏற்கனவே ஒப்பந்தம் போட்டபடிதான் நான் ரூ. 80 கோடி கேட்கிறேன் என்றும் மறுத்து விட்டார். இப்போது இந்த பஞ்சாயத்து கவுன்சிலுக்கு சென்றிருக்கிறது. கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக் கூடாது என கவுன்சிலிடம், லைகா நிறுவனம் புகார் அளித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்