- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 3 படம் ஷூட்டிங்கில் இத்தனை விவகாரம் ஒளிந்திருக்கிறதா? - நடிகர் கமலும் இயக்குனர் ஷங்கரும்...

இந்தியன் 3 படம் ஷூட்டிங்கில் இத்தனை விவகாரம் ஒளிந்திருக்கிறதா? – நடிகர் கமலும் இயக்குனர் ஷங்கரும் லைகா நிறுவனத்தை இப்படி சுத்து போட்டிருக்காங்களே?

- Advertisement -

இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் பல நூறு கோடி ரூபாய் இதில் முதலீடு செய்திருக்கிறது. இந்தியன் 2 படம் பலத்த நஷ்டத்தை சந்தித்த நிலையில் இந்தியன் 3 படம் மூலம் அடைந்த நஷ்டத்தை ஓரளவாவது சமாளிக்கலாம் என்ற நிலையில் அந்த படத்தை முடிக்க லைகா நிறுவனம் பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் படத்தின் ஹீரோ கமலும் இயக்குனர் ஷங்கரும் இந்தியன் 3 படம் குறித்து எந்த அக்கறையும் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் இந்தியன் 3 படத்தை முடித்துவிட்டு வியாபாரம் ஆகும்போது கமல் மற்றும் ஷங்கர் தங்களது சம்பளத்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்க வேண்டும் என்று லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தரப்பில் வேண்டுகோளாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் தொடர்ந்து லைகா தயாரித்த பல படங்களில் பலத்த நஷ்டத்தை சந்தித்த நிலையில் வேறுவழியின்றி இப்படி வேண்டுகோளை லைகா வைத்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே மற்றொரு முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கர் சம்பளம் ரூ. 36 கோடி. அதே போல் நடிகர் கமலின் சம்பளமும் ரூ. 36 கோடி. இதுதவிர ஷங்கர் கமல் ஆகியோருக்கு தலா 33 சதவீதம் பிராபர்டி ஷேர் தரப்பட்டுள்ளது. அதாவது படத்தின் லாபத்தில் இருவருக்கும் தலா 33 சதவீதம் பங்கு தரப்பட்டுள்ளது. அதே போல் லைகாவுக்கும் 33 சதவீதம் பிராபர்டி ஷேர் என ஒதுக்கப்பட்டுள்ளது.

அதாவது படத்தின் தயாரிப்பார் சுபாஸ்கரனுக்கு 33 சதவீதம் லாபத்தில் பங்கு, அதே போல் ஷங்கர் கமலுக்கும் தனித்தனியாக அதே அளவில் லாபத்தில் பங்கு மற்றும் இதுதவிர ஆளாளுக்கு ரூ. 36 கோடி என தனியாக சம்பளமும் பெற்றிருக்கின்றனர். இந்தியன் 3 படத்தில் கமல் மற்றும் ஷங்கருக்கு தலா ரூ. 100 சம்பளம், 26 சதவீதம் லாபத்தில் பங்கு என பேசப்பட்டுள்ளது.

- Advertisement -

அதனால் ஆளாளுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் 26 சதவீதம் லாபத்தில் பங்கு என்ற நிலையில், இப்போது லைகா நிறுவனம் படத்தை முடித்து வியாபாரம் ஆகும்போது சம்பளத்தை தருவதாக சொல்லி இருப்பதால் கமல் மற்றும் ஷங்கர் இருவருமே இந்தியன் 3 படத்தை முடிப்பதில் ஆர்வம் காட்டாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் கமலுக்கு இந்தியன் 2 மட்டுமின்றி தக்லைஃப் படமும் ஊத்திக்கொண்டது. ஷங்கருக்கும் இந்தியன் 2 படம் மற்றும் அவர் அடுத்து இயக்கிய கேம் சேஞ்சர் படமும் பிளாப் ஆகி விட்டது. இந்த சூழலில் இந்தியன் 3 படமும் ஒருவேளை தோல்வி என்றால் 100 கோடி ரூபாய் சம்பளம், 26 சதவீதம் லாபத்தில் பங்கு இதெல்லாம் போய் விடுமே என்ற அச்சத்தில் இருவரும் இந்தியன் 3 படத்தை தவிர்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்