கோலிவுட் திரை உலகில் அவ்வப்போது திரைப்படங்கள் வெளியாகி ஹிட் அடித்தாலும், சில திரைப்படங்களே வித்தியாசமான கதை களத்தில் அமைந்து ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம், பலராலும் கொண்டாடப்பட்டது.
இதற்கு முக்கிய காரணம், படத்தின் வித்தியாசமான கதை தான். அறிவியலை மையப்படுத்தி, பிக்சன் ஸ்டோரியாக இது எடுக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக, டைம் டிராவல் கதையை கூறியிருந்தால் இயக்குனர் ரவிக்குமார்.
எதிர்காலத்தில் இருக்கும் நபரால் கால இயந்திரம் நிகழ்வு காலத்திற்கு வர, அது கதாநாயகன் கையில் கிடைத்தால் என்னவெல்லாம் ஆகிறது என்கின்ற ஒன் லைன் தான் இதன் சாரம்சம். கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க, கருணாகரன் தன் பங்கிற்கு காமெடியில் வெளுத்து இருந்தார். படத்தின் பாடல்களும் ஹிட் அடிக்க, இன்று நேற்று நாளை திரைப்படம், தமிழ் சினிமாவில் வெற்றி பெற வரிசையில் இடம் பிடித்தது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்தார் ரவிக்குமார். அயலான் திரைப்படமாக இது உருவாகி வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்றாலும் இறுதியில் பொருளாதார பிரச்சினைகளால் படம் முடங்கிப் போனது. ஒரு வழியாக கடந்த பொங்கலன்று இந்த திரைப்படம் வெளியானது.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படத்திலும் ஒரு வித்தியாசமான கதை களத்தை ரவிக்குமார் கையில் எடுத்திருந்தார். இருப்பினும் அது சுவாரசியமாக சொல்லப்படாததால், அயலான் மிளிரவில்லை. இருப்பினும், வசூல் ரீதியாக இந்த திரைப்படம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இப்படியான சூழலில் ரவிக்குமார் அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்ததாக கூறப்பட்டது. ஆனால் அது இப்போதைக்கு நடைபெறாது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதன் காரணமாக அவர் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சென்று விட்டார். இதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளும் தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால் படத்தின் இல்லையாம். பின்னர் யார் கதாநாயகனாக நடிப்பார்கள் என்ற கேள்வியை தான் இப்போது ரசிகர்கள் முன் வைக்கிறார்கள்.





