- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் இமயம் பாரதிராஜா குறித்து பலரும் அறியாத தகவல்கள் - பால்பாண்டியாக இருந்த அவர் பாரதிராஜா...

இயக்குனர் இமயம் பாரதிராஜா குறித்து பலரும் அறியாத தகவல்கள் – பால்பாண்டியாக இருந்த அவர் பாரதிராஜா ஆனது எப்படி தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் தன் படங்களால் வசப்படுத்திய ஒரு கலை வித்தகர். அவரை பற்றிய சில முக்கியமான தகவல்களை அவரே ஒரு நேர்காணலில் பேசும் போது வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த முக்கிய தகவல்களை இப்போது தெரிந்துக் கொள்ளலாம்.

பாரதிராஜா முதலில் எடுக்க நினைத்த படம் புதுமைப்பெண். முத்து ராமனையும் ஜெயலலிதாவையும் வைத்து எடுக்க முயற்சி செய்தார். அது நடக்கவில்லை. 16 வயதினிலேயே படத்தில் முதலில் நாகேஷூம், ரோஜா ரமணியும் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. கமலையும் ஸ்ரீதேவியும் பிற படங்களில் மிகவும் பிஸியாக இருந்ததால் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் அவர்களை நடிக்க வைக்க முடியவில்லை.

- Advertisement -

நிறம் மாறாத பூக்கள் படத்தில் கமலையும், ரஜினியையும் நடிக்க வைக்க விரும்பினாலும் அது நடக்கவில்லை. கிராமத்துக் கதைகள் மட்டுமே இவருக்கு எடுக்கத் தெரியும் என்று மக்கள் நினைத்து விடக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட படங்கள் சிகப்பு ரோஜா, டிக் டிக் டிக் போன்ற படங்கள். கொடி பறக்குது படத்தில் நடிக்க ரஜினி 2 ரூபாய் மட்டுமே பாரதிராஜாவிடம் அட்வான்ஸ் தொகையாகப் பெற்றுக் கொண்டார்.

என் இனிய தமிழ் மக்களே என்று அவர் பேச ஆரம்பித்தது முதல் மரியாதை படத்தின் டைட்டிலுக்காக. தன்னுடைய ஒரு படத்தை ரீமேக் செய்ய நெருங்கிய நண்பர் கேட்டார் என்று கொடுக்க அவர் அதில் நடித்தவர்களுடைய கேரக்டர்களை எல்லாம் சிதைத்து விட்டாராம். அதற்குப் பின்னர் தனது எந்த படத்தையும் ரீமேக் செய்ய இவர் அனுமதிக்கவில்லை.

- Advertisement -

இப்போது வரும் திரைப்படங்களில் டெக்னாலஜி நிறைய டெவலப் ஆகியிருந்தாலும் மெட்டீரியல் இல்லை என்கிறார். இவரது இயற்பெயர் பால்பாண்டி. பள்ளியில் இவரது பெயர் சின்னச்சாமி. சினிமாவிற்காக தனது பெயரை பாரதிராஜா என்று வைத்துக் கொண்டார். அதில் அவரது தங்கை பெயரில் பாதியும், தம்பி பெயர் பாதியும் இணைந்துள்ளது. கடந்த 1964ல் சென்னைக்கு வந்த இவர் செய்த வேலை பெட்ரோல் பங்கில்தான். நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்த இவருக்கு இவரது பெரிய மூக்குத் தடையாக இருந்தது என்கிறார்.

16 வயதினிலே படம் மட்டும் தோல்வி அடைந்திருந்தால் ஊருக்கு கூத்துக் கட்டப் போயிருப்பேன் என்றும் கூறியிருக்கிறார். திருமண வாழ்க்கை தன்மானத்தை பாதிக்காத வகையிலும், மனைவியின் விருப்பப்படிதான் நடக்க வேண்டும் என்ற வகையிலும் இருக்கக் கூடாது என்கிறார். அழகை ரசிப்பதை பெரிதும் விரும்புவதாகும் அடுத்த பிறவி என்றிருந்தால் மீண்டும் சினிமாக்காரனகவே வாழவே விரும்புவதாகவும் பாரதிராஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்