ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் படம் சூர்யா 46 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்த படத்தை குறுகிய கால படமாக எடுக்க உள்ளனர். அதே போல் அதிக செலவு செய்யாமல் எளிமையான ஒரு படமாகவும் உருவாக்க உள்ளனர்.
இந்த படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க வருகிறார். இந்த படங்களுக்கு மத்தியில் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வேட்டை கருப்பு படமும் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி தமிழில் தனுஷ் நடிப்பில் வாத்தி படத்தை இயக்கியவர். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெறவில்லை. இதையடுத்து அவர் இயக்கிய லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது சூர்யா 46 படத்தை இயக்குகிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ஆனால் உண்மையில் சூர்யா 46 படத்தின் தயாரிப்பு நிறுவனம் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் இல்லை என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் உண்மையில் இந்த படத்தை தயாரிப்பது கங்குவா படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாதான் என்று தெரிய வந்துள்ளது.
சூர்யா 46 படத்தை பிராபர்டி ஷேர் அடிப்படையில் ஞானவேல் ராஜா 80 சதவீதம், சித்தாரா எண்டர்டெயின்ட்மென்ட் 20 சதவீதம் என்ற அடிப்படையில் இதற்கு ஒப்பந்தம் நடந்துள்ளது. இதற்கு காரணம் கங்குவா படம் தந்த பலத்த தோல்வியால், இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரித்தால் படம் ரிலீஸ் நேரத்தில் பணம் கொடுத்த பைனான்சியர்கள் மொத்த பணத்தை கேட்டு படத்துக்கு இடையூறு செய்வார்கள்.
படத்தை ரிலீஸ் செய்யும் நேரத்தில் பல இடையூறுகள் உருவாகும் என்பதால், இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் பேனருக்கு பின்னால் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பதாக தெரிய வந்துள்ளது. கங்குவா படம் மூலம் பலத்த நஷ்டத்தை சந்தித்த ஞானவேல் ராஜாவுக்கு உதவும் வகையில் நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவுதான் இது என்பதும், இதற்கு சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் முழு சம்மதம் தெரிவித்ததாகவும் இந்த தகவலை வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.





