- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை தனது அரசியல் களத்துக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாரா நடிகர் விஜய்? - வெளியானது...

ஜனநாயகன் படத்தை தனது அரசியல் களத்துக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாரா நடிகர் விஜய்? – வெளியானது முக்கிய தகவல்!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள படம் ஜனநாயகன். இது அவரது 69வது படம். இதுதான் என்னுடைய கடைசி படம் என்று ஏற்கனவே அவர் அறிவித்து விட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்திருக்கிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தெலுங்கில் 2 ஆண்டுகளுக்கு முன் நடிகர் பாலகிருஷ்ணா நந்தமூரி நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீ மேக்தான் ஜனநாயகன் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ரீ மேக் உரிமையை கேவிஎன் புரடக்சன்ஸ் வாங்கியிருப்பதன் மூலம் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த படத்தில் விஜய் கெட்டப்பும் பாலகிருஷ்ணா கெட்டப்பும் ஒன்றுபோல தான் இருக்கிறது.

- Advertisement -

இதற்கிடையே ஜனநாயகன் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படம் அரசியல் படம் கிடையாது என்று சொன்னாலும் படம் முழுக்க நடிகர் விஜய் அரசியல்தான் பேசியிருக்கிறார். ஜனநாயகன் படம் அரசியல் களத்தில் உருவாகவில்லை என்று சொன்னாலும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு படமாக தான் உருவாகி இருக்கிறது.

இதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கிறார். தேர்தல் நேரங்களில் நடக்கும் பிரசாரத்தின் போது மக்களை எப்படியெல்லாம் அரசியல்வாதிகள் குழப்புகிறார்கள், வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுகிறார்கள், ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை திசை திருப்புகிறார்கள் போன்ற விஷயங்களை நடிகர் விஜய் இந்த படத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார். அது போன்ற விஷயங்களில் ஏற்படும் சலசலப்பின் போது ஒரு போலீஸ் அதிகாரியாக விஜய் அதில் குறுக்கிட்டு தடுத்து நிறுத்துகிறார்.

- Advertisement -

மேலும் மக்களுக்கு விஜய் இதுகுறித்து அட்வைஸ் தரும் காட்சிகளும் படத்தின் வருகிறது. உண்மையான ஜனநாயகம் என்பது எப்படி இருக்க வேண்டும் ஜனநாயக நாட்டில் மக்கள், தலைவர்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய முக்கிய காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து நடிகர் விஜய், ஜனநாயகன் படத்தின் மூலமாக மக்களுக்கான அரசியல் கருத்துக்களைச் சொல்லி நடித்திருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

அதாவது 2026ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு முன்பாகவே ஜனநாயகன் படம் மூலமாகவும் தனது தேர்தல் பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக ஜனநாயகம் படத்தில் இது போன்ற காட்சிகளை நடிகர் விஜய் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஜனநாயகன் படத்தின் கதைக்களத்தில், தனது அரசியல் களத்துக்கு தேவையான பிரசார விஷயங்களை தனக்கு சாதகமாக விஜய் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சற்று முன்