தமிழ் சினிமாவில் டாப் லெவலில் 10 ஹீரோக்களை சொல்லலாம். அந்த வகையில் ரஜினி கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் சூர்யா விக்ரம் தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி மற்றும் சிலம்பரசன் ஆகியோர்தான் முதல் 10 இடங்களில் உள்ளனர். இதில் முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் தமிழ் சினிமாவில் டாப் 5 என்ற அளவுக்குதான் நடிகைகள் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். அந்த வரிசையில் நயன்தாரா திரிஷா சமந்தா ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோரை சொல்லலாம். ருக்மணி வசந்த் மமிதா பைஜூ பூஜா ஹெக்டே கயாடு லோஹர் போன்றவர்களும் இப்போது தமிழில் அதிக படங்களில் நடித்து வருகின்றனர்.
எனினும் ஹீரோக்களை போல கதாநாயகிகள் தொடர் வெற்றிகளை தமிழ் சினிமாவில் பெறுவது இல்லை. சில ஆண்டுகள் தாக்கு பிடிப்பது நாயகிகளுக்கு பெரிய சவாலாக உள்ளது. அந்த வரிசையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து நிற்பவர்களாக திரிஷா நயன்தாரா சமந்தா தமன்னா போன்றவர்களை சொல்லலாம். நேஷனல் கிரஷ் ஆக ராஷ்மிகா மந்தனாவும் தமிழில் தொடர்ந்து நடிக்கிறார்.
இதில் சமீபத்தில் வெளியான ஒரு தகவலின்படி நடிகை திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.85 கோடி என்று தெரிய வந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வரும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ. 95 கோடி முதல் ரூ. 110 கோடி வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அதே போல் தமிழ் தெலுங்கு இந்தியில் நடித்து வரும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ. 120 கோடி என்றும் கூறுகின்றனர். தென்னிந்திய ரசிகர்களால் நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 66 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இந்த வரிசையில் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.
அவர்தான் தமிழ் நடிகைகளில் டாப் 1ல் அதிக சொத்து குவித்த நடிகையாக உள்ளார். திரைப்பட நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராக அழகு பொருட்கள் தயாரிப்பாளராக விற்பனையாளராக உள்ள நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில் நிறைய சொத்துகளை சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகைகள் சம்பளம் குறித்த இந்த தகவல் அதிகாரபூர்வமானதாக இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.





