- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவ வச்சு நான் பிளாப் படம் கொடுத்துட்டேன்னு சொல்றாங்க... ஆனா என்னோட படத்தோட...

சூர்யாவ வச்சு நான் பிளாப் படம் கொடுத்துட்டேன்னு சொல்றாங்க… ஆனா என்னோட படத்தோட வசூலை அவரோட அடுத்த 2 திரைப்படங்கள் தொடவே இல்லை…. பகீர் கிளப்பிய பாண்டிராஜ்…

- Advertisement -

குடும்ப கதைகளை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். பசங்க திரைப்படத்தின் மூலம்தான் இவர் இயக்குனராக அறிமுகமானார். சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார் பாண்டிராஜ். இங்கிருந்து அவரது வெற்றி பயணம் ஆரம்பித்தது.

வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா என தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த அவருக்கு, திருப்புமுனையாக அமைந்தது கடைக்குட்டி சிங்கம். கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. அக்கா தம்பிக்கு இடையேயான உறவுகளை மையப்படுத்தி கதை கூறியிருந்தார் பாண்டியராஜ்.

- Advertisement -

கொஞ்சம் பிசிரு தட்டினாலும் சீரியல் என்று பலரும் கமெண்ட் செய்யும் இணையதளத்தில், மிகவும் ஜாக்கிரதையாக படத்தை எடுத்து, திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டி அசர வைத்தார் இயக்குனர் பாண்டிராஜ். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது.

இவரைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை அவர் எடுத்தார். ஆனால் இந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இப்படியான சூழலில் மூன்று வருடங்களுக்குப் பிறகு, பாண்டிராஜ் தலைவன் தலைவி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

இது கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டு வருகிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது திரையுலக பயணம் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். அதில், இருப்பதிலேயே எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்குதான் நாங்கள் அதிகமாக உழைப்பை போட்டோம். சொல்லப்போனால் கொரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கவனம் செலுத்தினோம்.

தயாரிப்பாளருக்கும் சரி சூர்யாக்கும் சரி அந்த திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் என்ன செய்வது அந்த நேரத்தில் அந்த திரைப்படம் வசூல் ஈட்டவில்லை. ஆனால் பாருங்கள் அதன் பிறகு சூர்யா நடித்த இரண்டு திரைப்படங்களுமே, எதற்கும் துணிந்தவன் வசூலை தாண்டவில்லை என்று தெரிவித்துள்ளார். பாண்டியராஜின் இந்த பேச்சு சூர்யா ரசிகர்களை சற்று கடுப்பேற்றி இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்