நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தை கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பிரியாமணி அபிராமி கௌதம் மேனன் பாபி தியோல் நரேன் பிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய், தி கோட் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் பெயரையும் அதிகாரபூர்வமாக அறிவித்தார். 2026ம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதே தனது லட்சியம் என்றும் சூளுரைத்தார்.
அப்போது, இப்போது நடித்து வரும் தி கோட் படத்துக்கு பிறகு எனது 69வது படத்தில் நடிப்பேன். அதுதான் என்னுடைய கடைசி படம். அதற்கு பின் நடிப்பில் இருந்து முற்றிலும் விலகி அரசியலில் முழு கவனம் செலுத்துவேன். அதனால் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படமே விஜயின் கடைசி படம் என தீர்மானமாக சொல்லி விட்டார்.
ஆனால் கடந்த வாரத்தில் இருந்து நடிகர் விஜய் தனது 70வது படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் அவர் கதை ரெடி செய்ய சொன்னதாகவும் தகவல் பரவியது. இது தி கோட் படத்தின் 2ம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1.5 ஆண்டுகள் இருப்பதால், இன்னும் நிறைய கால அவகாசம் இருப்பதால் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படத்தில் நடிக்க விஜய் திட்டமிட்டுதான், வெங்கட்பிரபு இயக்கத்தில் அப்படி ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவியது. இதற்கிடையே இப்போது விஜய் நடித்து வரும் தளபதி 69 படத்தின் தலைப்பு நாளைய தீர்ப்பு என்றும் சொல்லப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை நாளை மறுதினம் படக்குழுவே வெளியிடுகிறது.
நடிகர் விஜய் தனது 70வது படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, விஜய் ஏற்கனவே அறிவித்தபடி 69வது படத்தில் நடிப்பதுடன் சினிமாவை விட்டு விலக உள்ளார். ஒருவேளை 2026 சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், அவரது எண்ணம் மாறலாம். மீண்டும் சினிமாவில் நடிக்க வரலாம். ஆனால் இப்போதைக்கு அவரது 69வது படம் கடைசி படமாக உள்ளது. விஜய் தரப்பில் 70வது படத்தில் நடிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதே உண்மை, என்று தெளிவாக கூறியிருக்கிறார்.





