- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, லியோ படத்துல விஜய் அந்த கேரக்டர்லயா நடிக்கிறார் - அது ஏற்கனவே நிறைய நடிகர்கள்...

என்னது, லியோ படத்துல விஜய் அந்த கேரக்டர்லயா நடிக்கிறார் – அது ஏற்கனவே நிறைய நடிகர்கள் நடிச்ச கேரக்டர் ஆச்சே

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த லியோ படம், வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பாக, படத்தின் முன்னோட்டமான டிரெய்லர் கடந்த 5ம் தேதி வெளியிட்டப்பட்டது. டிரெய்லரில் விஜய் ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்து, ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் தரமான சம்பவங்களை செய்திருக்கிறார் என இப்போதே ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

டிரெய்லரில் வந்த சில காட்சிகளை வைத்து பார்க்கும்போது இந்த படத்தில் பார்த்திபன் என்ற கேரக்டரில் விஜய் நடிக்கிறார். அவரது காதலி அல்லது மனைவியாக திரிஷா நடித்திருப்பது உறுதியாகிறது. அதே போல் விஜய் போலவே இருக்கும் மற்றொரு விஜய், பல குற்றங்களை செய்பவராக இருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. அந்த குற்றங்களுக்கு பார்த்திபன் என்ற விஜய் பாதிக்கப்படுவதும் தெரிகிறது.

- Advertisement -

என்னை மாதிரியே ஒருத்தன் இருக்கறதால, என்னை வந்து டார்ச்சர் பண்ணினா நான் என்ன பண்ணுவேன் என்று ஒரு காட்சியில் விஜய் கெட்ட வார்த்தையால் திட்டுவதை போன்ற காட்சி டிரெய்லரில் இடம்பெற்றது. விஜய் பேசிய அந்த கெட்ட வார்த்தை தான், சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே வேளையில், விஜய் மற்றொரு கேரக்டரில் வருவதையும் இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

அதனால், விஜய் இரட்டை வேடங்களில் லியோவில் நடித்திருக்கிறார் என்ற கருத்து, ரசிகர்களிடையே பரவி வருகிறது. ஆனால், இப்போது விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை. ஒருவரே தான் இருவித கேரக்டர்களில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. ஆனால், இந்த படத்தில் நடிக்கும் பிரியா ஆனந்த் இன்னொரு விஜய்க்கு ஜோடி என்பதும் கூறப்படுகிறது.

- Advertisement -

விஜய்க்கு தலையில் அடிபடுவது போன்ற காட்சி டிரெய்லரில் வந்தது. அதனால், தலையில் அடிபட்டதால் விஜய் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார். அதாவது அவர் செய்த சம்பவங்கள், அவர் செய்யும் சம்பவங்கள் எதுவும் அவரது நினைவில் இருப்பது இல்லை. அதனால் தான், வேறு யாரோ செய்த தவறுகளை, குற்றங்களை தன் மீது பழி சுமத்துவதாக அந்த காட்சியில் ஆவேசமாக கத்துகிறார் என்றும் கூறப்படுகிறது.

பிரண்ட்ஸ் படத்தில், தலையில் அடிபட்டதால் சார்லி பழையதை எல்லாம் மறந்து விடுவார். பல படங்களில் ஹீரோ அல்லது ஹீரோயின் விபத்தில் தலையில் அடிபட்டு பழசை எல்லாம் மறந்து விடுவர். மீண்டும் அதே போல் தலையில் அடிபட்டாலோ, அல்லது அவர் பாடிய ஒரு பாடலை பாடினாலோ ஞாபகம் வந்துவிடும் என்ற ஒரு விசித்திரமான, மிக அபத்தமான ஒரு பார்மூலாவை தமிழ் சினிமா கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தலையில் அடிபட்டு பழசை எல்லாம் மறந்துவிடும் அம்னீஷியா கேரக்டரில் லியோ படத்தில் விஜய் நடித்திருக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. ஆனால் உண்மையில் அவர் அந்த கேரக்டரில்தான் நடித்திருக்கிறாரா, அல்லது வேறு டிவிஸ்ட் படத்தில் உள்ளதா என்பதை வரும் 19ம் தேதியன்றுதான் ரசிகர்கள் உறுதி செய்ய முடியும்.

- Advertisement -

சற்று முன்