- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டருக்கு படம் பார்க்க வர்றவங்க, இப்போ என்ன செய்றாங்க தெரியுமா? நடிகர் வடிவேலு சொன்ன புது...

தியேட்டருக்கு படம் பார்க்க வர்றவங்க, இப்போ என்ன செய்றாங்க தெரியுமா? நடிகர் வடிவேலு சொன்ன புது தகவல் – ரொம்பவும் பீலிங்கா சொல்றாரோ…

- Advertisement -

நடிகர் வடிவேலு ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடி கட்டிப் பறந்தவர். ஆனால் சில விவகாரங்களால் அவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் 2வது சுற்றில் பிஸியாக நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்த கேங்கர்ஸ் படம் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகர் வடிவேலு சமீபத்தில் நடித்த சந்திரமுகி 2 நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு குணச்சித்திர வேடத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடிக்க வடிவேலுவுக்கு வாய்ப்பு வந்த நிலையில் அதை மறுத்து விட்டார்.

- Advertisement -

சமீபத்தில் கன்னியாகுமரியில் வருமானவரித்துறை சார்ந்த நடந்த ஒரு விழாவில் நடிகர் வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார். அந்த விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல் சார்ந்த கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு கூறியதாவது, முதலில் நான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்குதான் நன்றி சொல்லணும். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் நான் நடித்த காமெடி காட்சிகளை போட்டு வைரலாக்கி விடுகின்றனர். எப்போதும் நான் பிஸியாக இருப்பது போலவே ஒரு விஷயத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விடுகின்றனர். எதோடு எதையாவது கனெக்ட் செய்து என்னை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து விடுகின்றனர்.

- Advertisement -

நான் நல்ல நல்ல கேரக்டர்களை இப்போது தேர்வு செய்து நடிக்கிறேன். எம்ஜிஆர் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது. சிவாஜி நடித்த சில படங்கள் ரஜினி நடித்த சில படங்கள் கமல் நடித்த சில படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. எப்போதுமே வெற்றிப் படங்களே தந்துக்கொண்டிருக்க முடியாது. தோல்வி படங்கள் வருவதும் சகஜம்தான்.

நீங்கள் பாதி படங்களை செல்போனில் பார்த்து விடுகிறீர்கள், வாட்சப்பில் படங்களை பார்க்கிறீர்கள். தியேட்டரில் படம் நல்லா இல்லை என்று விமர்சனம் செய்கிறீர்கள். அதனால் படம் பார்க்க வந்தவன், டிக்கெட்டை விற்கிறான். கடைசியில் போலீஸ் பிடித்தால், நான் படம் பார்க்க தான் வந்தேன். படம் பிடிக்காததால் டிக்கெட்டை விற்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு இன்றைக்கு நிலமை மோசமாக இருக்கிறது என்று நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்