நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் ஜனநாயகன். சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் கடந்த 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் வெளியாகவில்லை. இந்த படம் ரிலீஸ் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சென்சார் போர்டுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் இப்போது இந்த விவகாரம் கோர்ட்டில் வழக்காக மாறியிருக்கிறது.
நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் படம் குறித்த வழக்கு விசாரணையின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி விடும். ஒருவேளை படம் ரிலீஸ் செய்ய கோர்ட் அனுமதி தரலாம். அல்லது படம் ரிலீஸ் இன்னும் ஒரு மாதம் 2மாதம் என தள்ளிப் போகலாம்.
இந்த சூழலில் கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடித்த தெறி படம் ரி ரிலீஸ் செய்யப்படும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். ஜனநாயகன் படம் வெளிவராததால் அதிருப்தியில் இருந்த தளபதி ரசிகர்களுக்கு இந்த தகவல் சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் அந்த தேதியில் தெறி படம் ரி ரிலீஸ் ஆகாமல் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
குறிப்பிட்ட அந்த தேதியில் தலைவர் தம்பி தலைமையில் வா வாத்தியார் திரௌபதி 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக இருந்ததால் தெறி படம் ரி ரிலீஸ் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் 23ம் தேதியும் தெறி படம் ரி ரிலீஸ் செய்யப்படவில்லை. தேதி குறிப்பிடாமல் தெறி ரி ரிலீஸ்சை தயாரிப்பாளர் தாணு தள்ளி வைத்து விட்டார்.
இதற்கு காரணம் பொங்கலுக்கு வெளியான சின்ன படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால் தான் தெறி படத்தை தயாரிப்பாளர் தாணு ரி ரிலீஸ் செய்யவில்லை என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் இதற்கு அது மட்டுமே காரணம் இல்லை என்கிற புதிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது தெறி படத்தை இப்போதைக்கு ரி ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று விஜய் தரப்பில் இருந்தே தயாரிப்பாளர் தாணுவிடம் பேசப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ், தாணுவிடம் பேசி தெறி படத்தை ரி ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஜனநாயகன் படம் வெளிவருமா, வராதா என்ற குழப்பத்தில் தளபதி ரசிகர்கள் உள்ள நிலையில் தெறி படம் வந்தால் ஜனநாயகன் படமே வராது என்ற முடிவுக்கு ரசிகர்கள் வரும் வாய்ப்புள்ளது என்று கூறி தெறி படத்தின் ரி ரிலீஸ் இப்போதைக்கு வேண்டாம் என்று விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.





