கடந்த 2005ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா. நாசர், வினீத், வடிவேலு, சோனு சூட், செம்மீன் ஷீலா, கேஆர் விஜயா, வடிவேலு, மாளவிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் சந்திரமுகி. பி வாசு இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார்.
சந்திரமுகி படம், கடந்த 1993ம் ஆண்டில் மலையாளத்தில் டைரக்டர் பாசில் இயக்கத்தில் வெளியான மணிச்சித்ரதாழ் என்ற படத்தின் ரீ மேக் ஆகும். மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடித்திருந்த இந்த படத்தை தான் சந்திரமுகி என்ற பெயரில் சுரேஷ்கோபி கேரக்டரில் பிரபுவும், மோகன்லால் கேரக்டரில் ரஜினியும், ஷோபனா கேரக்டரில் ஜோதிகாவும் நடித்திருந்தனர்.
ஆனால் மலையாளத்தில் வெளியான மணிச்சித்ரதாழ் படத்தில் இத்தனை பில்டப்புகள், காமெடி காட்சிகள் எல்லாம் இருக்காது. ஆனால் தமிழில் ரஜினிக்காகவும், வடிவேலு காமெடிக்காகவும் பல விஷயங்களை சேர்த்திருந்தார் டைரக்டர் பி வாசு. ஏனெனில் தமிழ் சினிமாவில் இந்த பில்டப்புகளை தவிர்க்க இயக்குனர்களால் முடியாது.
ஆனால் சந்திரமுகி படத்தை பொருத்த வரை அப்படியே திரைகதையை பி வாசு அப்படியே கொண்டு வந்திருந்தார். தமிழில் ஜோதிகாவை காட்டிலும், மலையாளத்தில் ஷோபனா நடிப்பில் இன்னும் அதிக மார்க் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ரஜினியை விட மோகன்லால் நடிப்பு அந்த படத்தில் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும்.
மணிசித்ரதாழ் படம் 31 ஆண்டுகளுக்கு மீண்டும் இப்போது ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் பாசில் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே, பூவே பூச்சூடவா, காதலுக்கு மரியாதை போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். இவரது மகன்தான் நடிகர் பகத் பாசில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மணிசித்ரதாழ் படத்துக்கு 31 ஆண்டுகளுக்கு முன் 1993ம் ஆண்டில் வெளியான போது கிடைத்த வரவேற்பும், ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் இப்போதும் கிடைத்திருக்கிறது. மலையாளத்தில் மணிசித்ரதாழ் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், 2 நாட்களில் மட்டும் ரூ. 1.10 கோடி வசூலை கடந்துள்ளது. சந்திரமுகி ஒரிஜினல் வெர்ஷனுக்கு ரசிகர்கள் தந்துள்ள அமோக வரவேற்பு, மணிசித்ரதாழ் படத்தின் இயக்குனர் பாசில் உள்ளிட்ட படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது.





