- Advertisement -
Homeபொழுதுபோக்குடிமாண்டி காலனி 3 படத்தை வெளியிட கூடாது - இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட சென்னை...

டிமாண்டி காலனி 3 படத்தை வெளியிட கூடாது – இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்த டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. ஏற்கனவே டிமாண்டி காலனி டிமாண்டி காலனி 2 ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றன. இந்த படங்கள் திரில்லர் படங்களாக இருந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் டிமாண்டி காலனி 3ம் பாகம் படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. ஆனால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க கோரி இந்த படத்தின் இரண்டாம் பாகம் இணை தயாரிப்பாளர் ஏ விஜய சுப்பிரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

- Advertisement -

நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரவிந்த் கோஸ் கண்ணதாசன் ஆகியோர் கூறுகையில், ஒயிட்நைட்ஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் மனுதாரர், 2023ம் ஆண்டு அஜய் ஞானமுத்துடன் இணைந்து டிமான்டி காலனி 2ம் பாகத்தை தயாரித்தார்.

அப்போது செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின்படி எதிர்காலத்தில் டிமாண்டி காலனி என்ற பெயரை பயன்படுத்தி எடுக்கப்படும் அனைத்து பாகங்களையும் மனுதாரர்களுடன் இணைந்து தயாரிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது அவர்களது அனுமதி இன்றி டிமாண்டி காலனி 3ம் பாகத்தை பேஷன் ஃபிலிம் பேக்கரி நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து தயாரித்துள்ளார்.

- Advertisement -

அந்த படத்தை ஓடிடி தளத்துக்கு 17 கோடி ரூபாய்க்கு விற்பனையும் செய்துள்ளனர். மேலும் படத்தை திரையரங்கில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது. இந்த பிரச்னை குறித்து சமரச தீர்ப்பாயத்தையும் அணுகியுள்ளோம். எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.

இதுகுறித்து டிமாண்டி காலனி பட இயக்குனர் அஜய் ஞானமுத்து பேஷன் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார். அதுவரை டிமாண்டி காலனி 3 படத்தை வெளியிடக் கூடாது எனவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது ரசிகர்களை ஏமாற்றடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்