- Advertisement -
Homeபொழுதுபோக்குஉடைந்த கண்ணாடி ஒட்டுப்போட்டு தைத்த துணி - திமுக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்த தவெக...

உடைந்த கண்ணாடி ஒட்டுப்போட்டு தைத்த துணி – திமுக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்!

- Advertisement -

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இன்று நடந்த தவெக கூட்டத்தில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி யூனியனுக்கான தவெக கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் நடிகர் விஜய் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். இதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.

இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, இந்த கூட்டத்தை வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் கூட்டம் என்றார்கள். ஆனால் என்னை பொருத்தவரை இது நம் மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகும். அப்படித்தான் இதை நான் நினைக்கிறேன். நம் கட்சியினருக்கு தேர்தலை எதிர்கொள்ளும் அனுபவம் இல்லை என்கின்றனர்.

- Advertisement -

நம்முடைய வேட்பாளர்கள் அனைவரும் மிக சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர்களுக்கு பெரிய அளவில் பின்புலம் இல்லை என்றும் கூறுகிறார்கள். அனைவருக்கும் எம்எல்ஏ என்பவர் எப்படி இருக்க வேண்டும்? சட்டமன்ற உறுப்பினர் என்பவர் வெறும் அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பவராக இருக்கக் கூடாது.

சட்ட விரோதமான கல்குவாரிகளில் ஈடுபடுவராக இருக்கக் கூடாது. கேள்வி கேட்கும் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசி தாக்குபவர்களாக இருக்க கூடாது. எம்எல்ஏ என்பவர்கள் வெறும் மக்கள் பிரதிநிதிகள் அல்ல. அவர்கள் அந்த தொகுதியின் அந்த மக்களின் எல்லைக்காப்பாளர்கள். அவ்வாறுதான் அவர்கள் இருக்க வேண்டும். களத்தில் மக்களோடு மக்களாக நிற்கும் நபர்களையே நான் வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளேன்.

- Advertisement -

என்னால் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது என்பதால் என் சார்பாக எனது பிரதிநிதிகளாக இவர்களை தேர்ந்தெடுத்துள்ளேன். இவர்களை சட்டமன்ற உறுப்பினராக வேண்டியது உங்கள் பொறுப்பாகும். இது சாதாரண தேர்தல் அல்ல. இது இருமுனைப்போட்டி. மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையேயான போட்டி. உடைந்த கண்ணாடியை ஒட்டியது போலவும் கிழிந்த துணியை தைத்து வைத்தது போலவும் ஒரு ஒட்டு போட்ட கூட்டணி அது.

உங்களை நம்பி அரசியலுக்கு வந்த எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஏப்ரல் 23ம் தேதி அதிகாலையிலேயே தயாராகி வாக்குச்சாவடிக்கு சென்று விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு உங்களுக்காக மட்டுமே நான் வந்துள்ளேன். உங்களை ஒருபோதும் நான் ஏமாற்ற மாட்டேன். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா? மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று நடிகர் விஜய் பேசினார்.

- Advertisement -

சற்று முன்