- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை பரதேசி என மேடையில் திட்டிய விசால்

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை பரதேசி என மேடையில் திட்டிய விசால்

- Advertisement -

2004 ஆம் ஆண்டு செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷால். அதே ஆண்டில் அதற்குப் பிறகு அவர் நடித்த சண்டக்கோழி திரைப்படம் அவர் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. யார் இந்த நடிகர் என்று அனைவருமே திரும்பிப் பார்க்கக் கூடிய வண்ணம் நடிகர் விஷாலுக்கு அமைந்திருந்தது சண்டக்கோழி திரைப்படம்.அதைத்தொடர்ந்து அவர் திமிரு, சிவப்பதிகாரம்,தாமிரபரணி மலைக்கோட்டை என்று பல திரைப்படங்களை நடித்து வந்தார். இந்த திரைப்படங்கள் எல்லாம் நடிகர் விஷாலுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

இப்படி தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த விஷால் ஒரு சில ஆண்டுகளாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை கல்வி வருகிறது. இதனால் அவருடைய சினிமா வாழ்வில் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது இந்த நிலையில் தற்போது இவர் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது விஷால் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அதற்குப் பிறகு அவர் நடிகர் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தையும் இயக்கினார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை.

சிம்பு நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படம் மிக மோசமான வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆகும். அதற்குப் பிறகு இந்த வருடம் நடிகர் பிரபுதேவாவை வைத்து பகீரா என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார் இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன்.

- Advertisement -

இந்த திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு வித்தியாசமான கதைக்களமாகவும் இத்திரைப்படம் அமைந்திருந்தது. மேலும் தற்பொழுது இவர் இயக்கியிருக்கும் மார்க் ஆண்டினி திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்த சமயத்தில் இந்த திரைப்படத்தின் உடைய ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் திரைப்படத்தில் நடித்ததை பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசி இருந்தார்.

இந்தத் திரைப்படத்தின் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இத்தனை தோல்வி படங்களை சந்தித்த நடிகர் விஷால் பொறுப்புடன் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதாக கூறினார். ஆனால் கடைசியில் அவர் தன்னுடைய இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் பற்றி பேசும் பொழுது இந்த பரதேசி ஆதிக் ரவிச்சந்திரன் உடைய முகம் இந்த திரைப்படத்தில் தெரியும் என்று எதார்த்தமாக பேசிவிட்டார். அவன் எனக்கு தம்பி போல் என்றும் கூறியிருந்தார். நண்பர்கள் மொழியில் இவர் இதைக் கூறி இருந்தாலும் ரசிகர்கள் பொறுத்துக் கொள்ளவில்லை ஒரு இயக்குனரை எவ்வாறு இப்படி நடிகர் கூறலாம் என்று ஆத்திரமடைந்திருக்கிறார்கள்.

இதனால் நடிகர் விஷால் பேசிய இந்த மேடை பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இதுவே இந்த திரைப்படத்தின் மீது இருக்கும் நல்ல அபிப்ராயத்தை கெடுத்து விடுமோ என்ற பயமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்