- Advertisement -
Homeபொழுதுபோக்குமுண்டாசுப்பட்டி, ராட்சசன் இயக்குனருடன் கைகோர்த்த விஷ்ணு விஷால்... இரண்டு வானத்தின் கதை இதுதான்... அப்போ, ஹாட்ரிக்...

முண்டாசுப்பட்டி, ராட்சசன் இயக்குனருடன் கைகோர்த்த விஷ்ணு விஷால்… இரண்டு வானத்தின் கதை இதுதான்… அப்போ, ஹாட்ரிக் வெற்றின்னு அறிவிச்சிடலாமா….

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒன்று இரண்டு திரைப்படங்கள் கொடுத்தாலும் ரசிகர்கள் மனதில் பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் ராம் குமார். முண்டாசுப்பட்டி என்னும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். 1980களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கையில் எடுத்து, அதில் நகைச்சுவையை விருந்தாக படைத்தார் ராம்குமார்.

மிகப்பெரிய வெற்றிக்காக தேடிக் கொண்டிருந்த விஷ்ணு விஷாலுக்கு முண்டாசுப்பட்டி திரைப்படம் முக்கிய முகவரியாக அமைந்தது. மூடநம்பிக்கையை மூச்சாக கொண்டிருக்கும் முண்டாசுப்பட்டி கிராம மக்கள், அங்கு காதலால் சிக்கிவிடும் இரண்டு இளைஞர்கள் என அந்தத் திரைப்படத்தின் கதையை மிக சுவாரசியமாக கூறியிருப்பார் ராம்குமார்.

தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கும் முனிஸ் காந்த்க்கு முண்டாசுப்பட்டி திரைப்படம் தான் விலாசமாக அமைந்தது. படம் ஆரம்பித்தது முதல் இறுதிக் காட்சிகள் வரை நம்மை வயிறு குலுங்க இயக்குனர் சிரிக்க வைத்தார். இதன் காரணமாக முண்டாசுப்பட்டி திரைப்படம் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படி முதல் திரைப்படத்தில் நகைச்சுவையில் கலக்கிய ராம்குமார் அடுத்ததாக யாரும் எதிர்பாராத வகையில் திரில்லர் திரைப்படத்தை கொடுத்து நம்மை பயமுறுத்தினார். இப்போது வரை தமிழ் சினிமாவின் திரில்லர் திரைப்படங்கள் என்று நாம் பட்டியல் போட்டால் அதில் ராட்சசன் திரைப்படம் முதல் இடத்திற்கு வந்து விடும்.

ஏன், திரில்லர் திரைப்படங்களைப் பற்றி ஒரு விமர்சனம் இருந்தாலும் அது ராட்சசன் போன்று இருக்குமா? என்றும் இங்கு பலர் கேட்பார்கள். அந்தளவுக்கு அந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை கொடுத்து ரசிகர்களை இருக்கையின் நுணுக்கி வரவழைத்தார் இயக்குனர் ராம்குமார். விஷ்ணு விஷாலுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.

2018 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியான நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ராம்குமார் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். இந்த முறையும் அவர் விஷ்ணு விஷால் உடன் தான் கைகோர்த்துள்ளார். பிரேமலு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மமீதா பைஜூ இதில் கதாநாயகியாக வருகிறார். படத்திற்கு இரண்டு வானம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின், படப்பிடிப்பு முழுக்க முழுக்க கொடைக்கானலில் நடைபெற்று உள்ளது. ரொமான்ஸ் மற்றும் காதல் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக இதனை ராம்குமார் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்