எப்போதெல்லாம் அறிவியல் தொழில்நுட்பம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பக்கபலமாக நின்று உதவுகிறதோ அதே நேரத்தில் மறைமுகமாக அந்த வளர்ச்சியால் சமுதாயத்துக்கு பலவிதமான கேடுகளும் விளைவிக்கின்றன. தீக்குச்சியை வைத்து தீபமும் ஏற்றலாம், வீட்டையும் கொளுத்தலாம் என்கிற கதை தான் இது. அதில் மிக முக்கியமான தொடுதிரை அலைபேசிகளாக நம் கைகளில் இருக்கும் செல்போன்கள்தான்.
பலருக்கும் பலவிதங்களில் எண்ணிடலங்கா வகைகளில் உதவிக் கொண்டு இருக்கும் இந்த மொபைல் போன்களால் பல விதங்களால் சமுதாயத்துக்கு தேவையற்ற மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் பாதகமாக செயல்களுக்கும் மிக உதவியாக இருந்து வருகின்றன என்றால் அது மிகையல்ல. இதனால் பலரது வாழ்வே கேள்விக்குறியாகிறது. உயிர்பலிகளையும் நிறைய வாங்கி விட்டது.
உதாரணமாக ஓடும் ரயில்களின் முன் நின்று செல்பி எடுத்தும் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளத்துக்கு நடுவில் நின்று செல்பி எடுத்தும், உயர்ந்து வரும் கடல் அலைகளுக்கு மத்தியில் நின்று செல்பி எடுத்தும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அதுமட்டுமின்றி சமூக விரோதமான செயல்கள் பலவுக்கும் செல்போன் மிகவும் உபயோகமானதாக மாறிவிட்டது.
சமூக வலைதளங்களில், செல்போன்களால் ஏற்படும் தீய விளைவுகளை பற்றிய விழிப்புணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்திய ஒரு படம்தான் இரும்புத்திரை. நடிகர்கள் விஷால் அர்ஜூன் நடித்த இந்த படத்தை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கி இருந்தார். கடந்த 2018ம் ஆண்டில் இந்த படம் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றது.
இப்போது இரும்புத்திரை படத்தின் 2ம் பாகத்தை இயக்க இயக்குனர் பிஎஸ் மித்ரன் தயாராகி விட்டார். அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் அவர் தீவிரமாக இறங்கிய நிலையில் படத்தில் நாயகனாக மீண்டும் விஷால் நடிக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் மற்ற கேரக்டர்களில் நடிக்க வேண்டிய நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
நடிகர் விஷால் இப்போது திருமணத்துக்கு தயாராகி விட்டார். இன்னும் 4 மாதங்களில் அவரது திருமணம் நிச்சயம் நடக்கும் என்றும் உறுதியாக கூறியிருக்கிறார். விஷாலின் வருங்கால மனைவி நடிகை சாய் தன்ஷிகா தான் என்ற தகவலும் பரவி வருகிறது. இதற்கிடையே கைகளில் நடுக்கம், மயக்கம் என விஷால் அடிக்கடி உடல் நலமும் பாதிக்கப்படுகிறார். இரும்புத்திரை 2 படத்தில் நடிக்க எல்லோரும் ரெடியானாலும் நடிகர் விஷால் ரெடியாகி விடுவாரா என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த கேள்வியும் குழப்பமும் எழுந்துள்ளது.





