நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவதும் நான்காயிரம் ஸ்கிரீன்களில் இந்த திரைப்படமானது வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் நடித்த படம் ரிலீஸ் ஆனதால் அந்த படத்தை காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் திரையரங்குக்கு சென்றனர்.
அவர்களது ஆவலை ஏமாற்றாமல் படம் அமைந்திருந்தது. நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடி, ரஜினிகாந்தின் ஸ்டைல் பிளஸ் மாஸ் ஆகியவைகள் இணைந்து படத்தை மெகா ஹிட் ஆகிவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி இந்தப் படத்தின் மூலம் நெல்சன், ரஜினிகாந்த் தரமான கம்பேக் கொடுத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ்களை பார்க்க முடிகிறது.
படம் வெளியான நாளிலிருந்து பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக தியேட்டருக்கு ரசிகர்களின் கூட்டமும் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை படமானது ஆறு நாட்களில் 400 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராததால் அது வந்த பிறகுதான் எதுவாக இருந்தாலும் உறுதியாக சொல்ல முடியும்.
படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் சில காட்சிகள் விக்ரம் படத்தின் காப்பி போல் இருப்பதாக ஆங்காங்கே விமர்சனங்கள் எழுந்தன. உதாரணமாக படத்தில் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டது; மகனை கடத்தல் கும்பலிடமிருந்து மீட்க தந்தை போராடுவது; அங்கு போதை பொருள் கடத்தல், இங்கு சிலை கடத்தல் என விக்ரமின் வாடை ஜெயிலரில் பலமாகவே அடித்ததாக குரல்கள் கேட்டன.
குடும்பங்கள் கொ. வெற்றி:
நாம சொன்னா வன்மம், வத்தக்கொழம்புன்னு வடை வாயனுங்க குதிப்பானுங்க.
இந்தாங்கடா.. வெளிநாட்ல இருக்கற நம்நாட்டு பெண்கள்.. உங்களுக்கு அன்பளிப்பு தந்துருக்காங்க. கேட்ச் பண்ணிக்கங்க
அங்க Doughnut வடை மிஷின் எத்தன மில்லியன் டாலர்ல போய் நிக்கப்போகுதோ!! pic.twitter.com/T78idYocw7
— Blue Sattai Maran (@tamiltalkies) August 16, 2023
இந்நிலையில் வெளிநாட்டில் ஜெயிலர் படம் பார்த்த பிறகு தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒரு பெண்மணி விக்ரம் படத்தின் காப்பிதான் ஜெயிலர் என கூறும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்து பிரபல திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடும்பங்கள் கொ. வெற்றி: நாம சொன்னா வன்மம், வத்தக்கொழம்புன்னு வடை வாயனுங்க குதிப்பானுங்க. இந்தாங்கடா.. வெளிநாட்ல இருக்கற நம்நாட்டு பெண்கள்.. உங்களுக்கு அன்பளிப்பு தந்துருக்காங்க. கேட்ச் பண்ணிக்கங்க அங்க Doughnut வடை மிஷின் எத்தன மில்லியன் டாலர்ல போய் நிக்கப்போகுதோ” என குறிப்பிட்டிருக்கிறார்.





