- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னிடம் வில்லங்கமாக கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு பயங்கர காண்டாகி பதிலளித்த லோகேஷ் கனகராஜ் - இதெல்லாம்...

தன்னிடம் வில்லங்கமாக கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு பயங்கர காண்டாகி பதிலளித்த லோகேஷ் கனகராஜ் – இதெல்லாம் முதல்ல யோசிச்சிருக்கணும் ப்ரோ?

- Advertisement -

கோயம்புத்தூரை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். சென்னையில் வங்கியில் பணிபுரிந்தவர். களம் என்ற குறும்படத்தை இயக்கினார். அந்த படம் அதிகம் பேருடைய கவனத்தை ஈர்த்தது. இந்த குறும்படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜை அழைத்து பாராட்டினார். இது அவருக்கு நிறைய நம்பிக்கையை தந்தது.

அதன்பிறகு வங்கி பணியை விட்டு விலகி, ஒன்றரை ஆண்டுகள் சினிமா வாய்ப்புகளை தேடி அலைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம்தான் மாநகரம். இந்த படம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. முதல் படமே லோகேஷ் கனகராஜூக்கு கவனத்தை பெற்றுத் தந்தது.

- Advertisement -

அதன்பிறகு கார்த்தி நடித்த கைதி படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஜய் நடித்த மாஸ்டர் படமும், அதன்பிறகு கமல்ஹாசன் நடித்த விக்ரம் படமும் மிகப்பெரிய வெற்றியை தந்தது. இந்த படங்களை அடுத்து மீண்டும் விஜய் நடித்த லியோ படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக இது தோல்விப்படம் என்றால், வசூல் ரீதியாக லியோ படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக தான் பார்க்கப்படுகிறது.

இப்போது கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ரஜினி 171 படத்தை இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இதற்கான தனது சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ள அவர், போன் பேசுவதை கூட குறைத்துக் கொண்டார். இவர் கதை எழுதுவதற்காக மாதம் ரூ. 3 லட்சம் வாடகை லக்ஸரி சூட் ரூம் போட்டு தந்திக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில், கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுடன் இனிமேல் என்ற இசை ஆல்பத்தில் நடித்து, லோகேஷ் கனகராஜ் பயங்கர சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவரது ரசிகர்கள், லோகிண்ணா, என்னண்ணா பண்ணி வெச்சிருக்கே என, அவரது ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பிலும் இதுகுறித்து கேள்வியால் பயங்கர கடுப்பாகி டென்சனில் பேசியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,

ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது குறித்தும், அதற்கு உங்களின் மனைவி ரியாக்சன் என்ன என்பதையும் சற்று மாற்றி, ஒரு நடிகராக உங்களை பார்த்த உங்கள் மனைவி என்ன சொன்னார்கள் என செய்தியாளர் கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த அவர், என் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த கேள்விகளை ஆரம்பத்தில் இருந்தே நான் தவிர்த்து வருகிறேன். அதுபற்றி இனிமேலும் பேச விரும்பவில்லை. என்னை பாராட்டுவது, விமர்சிப்பது என்னோடு இருக்கட்டும். என் வீட்டில் நடப்பது குறித்து தெரியக்கூடாது என்பதில் தெளிவாக, உறுதியாக இருக்கிறேன் என டென்சனாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்