- Advertisement -
நேற்று சென்னையில் நடிகர் தனுஷின் நற்பணி இயக்கத்தின் மகளிரணி சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர். தன்னை நேரில் காண வந்த பெண் ரசிகைகளுக்கு சைவம் அசைவம் என சுவையான விருந்து நடிகர் தனுஷ் தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது. சிக்கன் பிரியாணி முட்டை பிரட் அல்வா ஆனியன் பச்சடி என பல்வேறு உணவு வகைகள் இத்துடன் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி காமாட்சி விளக்கு 3 ஆயிரம் பெண்களுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும் ரூ. 1.5 கோடி என தெரிய வந்துள்ளது.





