நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. அதன்பிறகு இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் என்ற படத்தை மீண்டும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் டைரக்ட் செய்து வருகிறார்.
தாய்கிழவி படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் சிவக்குமார் முருகேசனின் இயக்கத்தில் அவரது 2வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆனார். தேனி மாவட்டத்தில் இந்த படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்தது.
இந்த நிலையில் சேயோன் 2ம் கட்ட படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இதற்கிடையே குடும்பத்துடன் நடிகர் சிவகார்த்திகேயன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று விட்டார். அவர் சேயோன் படப்பிடிப்பில் பங்கேற்றாமல் இப்படி வெளிநாட்டுக்குச் சென்றது இயக்குனர் மீது உள்ள கோபம்தான் என்று தெரிய வந்துள்ளது.
அதனால் சேயோன் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போகவும் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தான் என கூறப்படுகிறது. சேயோன் படத்தில் நான் வரும் காட்சிகளை மாஸ் ஆக காட்ட வேண்டும். படத்தில் நான் வருகிற சீன் எல்லாம் மாஸ் ஆக இருக்க வேண்டும் என்றும் இயக்குனரை சிவகார்த்திகேயன் டார்ச்சர் செய்திருக்கிறார்.
இதற்கு இயக்குனர் சிவக்குமார் முருகேசன் சம்மதிக்காமல் மறுத்திருக்கிறார். அவரது முதல் படம் தாய்கிழவி படம் யதார்த்தமாக கதைக்களத்தில் இருந்ததால்தான் படம் பெரிய வெற்றியை பெற்றது. அதனால் சேயோன் படத்தில் எல்லா காட்சியிலும் ஹீரோவை மட்டுமே மாஸ் ஆக காட்டினால் படத்தில் யதார்த்தம் இருக்காது என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.
இதைக்கேட்டு படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் கடுப்பாகி இருக்கிறார். அதனால் தான் சேயோன் 2ம் கட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பஞ்சாயத்து மிக விரைவில் தயாரிப்பாளர் கமல்ஹாசன் முன்னிலையில் பேசப்பட உள்ளதாகவும் அதன்பிறகுதான் 2ம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரிகிறது.





