- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகைக்கு ரூ. 35 கோடியில் புதிய பங்களா வாங்கி கொடுத்தாரா நடிகர் விஜய்? -...

பிரபல நடிகைக்கு ரூ. 35 கோடியில் புதிய பங்களா வாங்கி கொடுத்தாரா நடிகர் விஜய்? – அரசியல் கட்சி தலைவரான நேரத்துல இதென்னப்பா புது பஞ்சாயத்து?

- Advertisement -

நடிகர் விஜய், இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ள அவர், அதன்பிறகு முழு நேர அரசியல்வாதியாக, தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவராக தன் மக்கள் சேவையை தொடர உள்ளார்.

ஏற்கனவே 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு, சென்னைக்கு நேரில் வரவழைத்து ரொக்க பரிசுகளை அள்ளி வழங்கினார் விஜய். சமீபத்தில், மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கும் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

- Advertisement -

மக்களுக்கு சேவை செய்ய அரசியல்தான் சிறந்த வழியாக, அரசியல் அமைப்பு ரீதியாக பல திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பதால், அரசியலுக்கு வருகிறேன். சாதி, மதம் அற்ற, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ அடிப்படையில் ஊழல் அற்ற, வெளிப்படையாக நிர்வாகத்தை தருவேன் என்றும் முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்நிலையில், விஜய் குறித்த சில பூதாகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே நடிகை திரிஷாவுடன் அவர் திருப்பாச்சி, கில்லி, குருவி, ஆதி போன்ற படங்களில் நடித்த நிலையில், திரிஷாவுடன் இனி நடிக்க கூடாது என விஜய் மனைவி சங்கீதா தடை விதித்து இருந்தார். ஆனால் அதையும் மீறி விஜய், லியோ படத்தில் திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார், லிப் டூ லிப் காட்சியிலும் நடித்திருந்தார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஏற்கனவே ஒருமுறை திரிஷா வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்த போது, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்று பிடிப்பட்டது. அதை பற்றி விசாரித்த போது, அது விஜய் எனக்கு அன்பளிப்பாக தந்ததாக அதிகாரிகளிடம் திரிஷா கூறியதாக பரபரப்பு ஏற்பட்டது.

திரிஷாவுக்கும், விஜய்க்கும் நீடிக்கும் நட்பு காரணமாகவே, விஜய் மனைவி சங்கீதா அவரை விட்டு பிரிந்து லண்டனில் சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இப்போது விஜய், ரூ. 35 கோடியில் திரிஷாவுக்கு பங்களா ஒன்று வாங்கி தந்திருப்பதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அரசியல் கட்சி தலைவராக விஜய் உருவெடுத்துள்ள நிலையில், இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியிருப்பது உருட்டா, உண்மையா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

- Advertisement -

சற்று முன்