- Advertisement -
Homeபொழுதுபோக்குமுனி படம் எடுத்தவருக்கு நாக்கில் சனி, அரசியலுக்கு வராதீங்க ஒதுங்கிடுங்க - நடிகர் ராகவா லாரன்ஸ்சை...

முனி படம் எடுத்தவருக்கு நாக்கில் சனி, அரசியலுக்கு வராதீங்க ஒதுங்கிடுங்க – நடிகர் ராகவா லாரன்ஸ்சை நார் நாராக கிழித்த பிரபல இயக்குனர்!

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் தெருநாய்களுடன் பொதுமக்களை ஒப்பிட்டு பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ரட்சகன் பட இயக்குனர் பிரவீன் காந்தி கடுமையாக பேசியிருக்கிறார். இவர் பிக்பாஸ் சீன் 9ல் போட்டியாளராக பங்கேற்றவர். வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரவீன் காந்தி, மிகவும் கடுமையாக ராகவா லாரன்ஸ்சை விமர்சித்துள்ளார்.

இயக்குனர் பிரவீன் காந்தி வீடியோவில் பேசியிருப்பதாவது, முனி படம் எடுத்த ராகவா லாரன்ஸ்க்கு நாக்கில் சனி பிடித்து விட்டது. முனி உங்களை சனி திசையில் அழைத்துச் செல்கிறது. காஞ்சனா படம் மூலம் உங்களை கௌரவப்படுத்திய இந்த மக்கள் தெருநாய்களா? நாய் என்றால் கேவலம் அல்ல. அவர் காலபைரவர்.

- Advertisement -

ஒரு தெருவில் நாய் வசிக்கிறது என்றால் அந்த தெருவில் வசிப்பவர்களை காப்பாற்றவும் பாதுகாக்கவும் தான் அந்த நாய் அங்கு இருக்கிறது. அந்த வீட்டில் வசிப்பவரின் பழைய சொந்தம்தான் அந்த நாய். இப்போது நாயுடன் மக்களை ஒப்பிட்டு பேசுகிறாய் என்றால் நாய்க்கு பிஸ்கட் போடுவது போல் பிியாணி போடுவது போல் மக்களுக்கு நீ செய்தது எல்லாம் சுயநலமா?

இப்படி சீன் போட்டு அதை வீடியோ எடுத்துப் போட்டு மக்களை ஏமாத்தீட்டு இருக்கறியா? என்ன வார்த்தை அது? எங்கேயோ கிடந்தவன் நீ. யோசித்து பார். எங்க இருந்தே நீ? ரஜினி என்ற ஒரு மனிதர்தான் உனக்கு அடையாளம் தந்தார். இப்போது விஜய் ஜெயித்தவுடனே புற்றீசல் மாதிரி எல்லோரும் கிளம்பி வர்றீங்களே?

- Advertisement -

இதுவரை நீங்க செஞ்ச எல்லாமே நாடகமா? அத்தனையும் நடிப்பா கோபால் என்றுதான் கேட்க தோன்றுகிறது. அறக்கட்டளை என்ற பெயரில் ஏகப்பட்ட பணத்தை கரெக்ட் பண்ணி அது எல்லாருக்கும் தெரியாதா? நீங்க நடிகர் என்பதாலும் புகழ் பெற்ற ஆள் என்பதாலும் டிரஸ்ட்டில் பணம் கொட்டும். சரி அப்படியே இருந்தாலும் நீங்க செய்கிற உதவிகளுக்காக பாராட்டலாம். ஆனா நீங்க வந்து அன்னை தெரசா மாதிரி ஒரு சரசம் பண்ணிட்டு இருந்தீங்க, அது இப்போ தெரிஞ்சு போச்சு. இது ஒரு டிராமா.

காஞ்சனா படம் மூலம் உங்களை உயர்த்தி பிடித்த மக்களை காஞ்ச நாய் மாதிரி மாத்தி சொல்லிட்டீங்க. தயவு செஞ்சு ஒதுங்கிடுங்க. உள்ளே வராதீங்க. அரசியலுக்கு வந்தீங்க மக்கள் கொதிச்சிட்டாங்க. அரசியல்வாதிங்க மக்களை ஏமாத்தறாங்கன்னு தெரியும். ஆனா மரியாதை இல்லாமல் பேசினால் கொதிச்சிடுவாங்க. மக்கள் இனி லாரன்ஸ்சை சைலன்ஸ் சைலன்ஸ் சைலன்ஸ் என்றுதான் சொல்வார்கள். மீறி வந்தால் மக்களால் நாறடிக்கப்படுவார் என்று இயக்குனர் பிரவீன் காந்தி அந்த வீடியோவில் கோபமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்