- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்க விடும் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் - ஜெயிலர் 2...

தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்க விடும் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் – ஜெயிலர் 2 படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!

- Advertisement -

திமுக அரசு இருந்த காலகட்டத்தில் பண்டிகை நாட்களில் மட்டுமே படம் ரிலீஸாகும் முதல் நாளில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இருந்தது. மற்ற நாட்களில் அரசிடம் இதற்காக அனுமதி பெற வேண்டும். ஆனால் விஜய் முதல்வரான பிறகு, புதிய படங்கள் ரிலீஸ் செய்தால் 7 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கினார். இந்த நிலையில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதித்துள்ள நிலையில், பல ஊர்களில் ஜெயிலர் 2 படத்தை வருகிற 15ம் தேதி காலை 8 மணி காலை 8.30 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமீறலால் ஜெயிலர் 2 படத்துக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

சற்று முன்