- Advertisement -
கவிஞர் கண்ணதாசன் மகன் நடிகர் அண்ணாதுரை பல படங்களில் காமெடி காட்சிகளில் நடிகர் விவேக்குடன் இணைந்து நடித்தவர். நேர்காணல் ஒன்றில் அவர் கூறியதாவது, கடந்த 1973ம் ஆண்டில் எனது சகோதரி ரேவதி சண்முகம் திருமண விழாவுக்கு எம்ஜிஆர் வந்திருந்தார். அன்றைக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார். அப்போது அந்த திருமண விழாவுக்கு திமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்களும் வந்திருந்தனர். மண்டபத்தில் முன்வரிசையில் அவர்கள் அமர்ந்திருந்தனர். எம்ஜிஆரையும் முன்வரிசையில் அமருமாறு அப்பா கண்ணதாசன் கூறினார். ஆனால் அதை மறுத்த எம்ஜிஆர் பின்வரிசையில் சென்று அமர்ந்துக்கொண்டார். இப்படி எந்த இடத்திலும் நான் முன்னால் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதவர் எம்ஜிஆர் என்று அண்ணாதுரை கண்ணதாசன் கூறியிருக்கிறார்.





