- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்னும் பல மாதங்கள் தள்ளிப் போக வாய்ப்பு? ரஜினி எடுத்த திடீர்...

ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்னும் பல மாதங்கள் தள்ளிப் போக வாய்ப்பு? ரஜினி எடுத்த திடீர் முடிவால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தவிப்பு – நெல்சனுக்கு வந்த புது தலைவலி!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இந்த மாத இறுதியுடன் முடிவடைய உள்ளது. அதனால் அடுத்த மாதம் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கப்படுகிறது. இந்த வேகத்தில் சென்றால் தீபாவளிக்கு முன்பே மே ஆகஸ்ட் மாதங்களில் கூலி படம் திரைக்கு வந்துவிடலாம் என்றும் சூழல் நிலவுகிறது.

கூலி படத்தை முடித்த பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தில் நடிக்க ஏதுவாக ஏற்கனவே நடிகர் கார்த்தி பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் வேகமாக நடித்து வருகிறார். அந்த படம் ஷூட்டிங் முடிந்தவுடன் கைதி 2 படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியாக பெரிய வரவேற்பை வசூலை குவித்த படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவான ஜெயிலர் படம், இன்னொரு பாட்ஷா படம் போல ரஜினிக்கு மாஸ் ஹிட் படமாக அமைந்தது. ரூ. 600 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்தது.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி யோகிபாபு சரவணன் அறந்தாங்கி நிஷா மாரிமுத்து மலையாள நடிகர் விநாயகன் ரெடின் கிங்ஸி கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தார். இந்த படத்தில் கேமியோ ரோலில் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி ஷெராப் சுனில் நடித்திருந்தனர். காவலய்யா பாடலுக்கு தமன்னா குத்தாட்டம் போட்டிருந்தார்.

- Advertisement -

சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் 2 படத்தை தயாரிக்க முன்வந்த நிலையில், ரஜினியும் முதன்முறையாக தனது படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படப்பிடிப்பில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ரஜினி பங்கேற்பார் என எதிர்பார்த்த நிலையில், இப்போது 3 மாதங்கள் ரஜினி ஓய்வெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனது பயோபிக் கதை அதாவது சுயசரிதை எழுத ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் தமிழ் சினிமாவில் அவர் 50வது ஆண்டில் இப்போது இருப்பதால் அந்த பொன்விழாவை முன்னிட்டு தனது வாழ்க்கை சரித்திரத்தை ரசிகர்களுக்கு புத்தகமாக தர முடிவு செய்திருப்பதாகவும், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ரஜினி சொல்ல சொல்ல அவரது சுயசரிதையை எழுத வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜெயிலர் 2 படம் படப்பிடிப்பு பல மாதங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. எனினும் தாமதம் ஆனாலும் படம் சூப்பர் ஹிட் வெற்றியை தரும் என்கின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்