- Advertisement -
Homeபொழுதுபோக்குதிமுகவுடன் விஜய்க்கு மோதல் துவங்கியது அதில் இருந்துதான்… நடந்த சம்பவங்களை புட்டு புட்டு வைத்த பிரபலம்...

திமுகவுடன் விஜய்க்கு மோதல் துவங்கியது அதில் இருந்துதான்… நடந்த சம்பவங்களை புட்டு புட்டு வைத்த பிரபலம் – அட இவ்வளவு நடந்திருக்குதா?

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய் இப்போது தமிழக அரசியல் களத்தில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். தனது கட்சி சார்பில் இரண்டு அரசியல் மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி முடித்த அவர் இப்போது மக்கள் சந்திப்பு பயணத்தை மாவட்டம் வாரியாக மேற்கொண்டு வருகிறார். ஆளுங்கட்சி திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் விஜய் திமுக மோதல் குறித்து கூறியதாவது, நடிகர் விஜய் நடித்த படங்களில் மிக மோசமான தோல்வியை சந்தித்த படம் சுறா. இந்த படம் விஜய்க்கு தந்த கசப்பான பாடம்தான் இன்று அரசியலுக்கு வரும் அளவுக்கு அவரை தூண்டியது என்று சொல்லலாம். இந்த படம் தந்த பாடத்தை அவர் இன்று வரை மறந்திருக்க மாட்டார்.

- Advertisement -

சுறா படத்தை முதலில் தயாரித்தவர் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர்தான். சங்கிலி முருகன் பெயரில் அதை எடுத்திருந்தார். படம் முடிந்த பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அதை விற்றுவிட்டார். 2010ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. ஆனால் சுறா என்ற டைட்டிலுக்கு கீழ் தி லீடர் என்று எஸ்ஏ சந்திரசகேர் போட்டிருந்தார். ஆனால் தி லீடர் என்ற சப் டைட்டிலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கி விட்டது.

இதனால் அப்செட் ஆன எஸ்ஏ சந்திரசேகர், இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், லீடர் என்றால் அவர் ஒரே ஒருவர் கலைஞர்தான். எங்களுக்கு அவர்தான் தலைவர். அதனால் தி லீடர் என படத்தின் டைட்டிலில் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதுகுறித்து அறிந்த நடிகர் விஜயும் அப்செட் ஆகியிருக்கிறார். படத்தில் தி லீடர் என்பதில் என்ன தவறு இருக்கிறது என்று விஜய் வருத்தப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

அதன்பிறகு சுறா படத்தை பார்த்த சன் பிக்சர்ஸ், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொல்லி முதலில் பேசிய தொகையை தர மறுத்திருக்கின்றனர். நாங்கள் கொடுப்பதை வாங்கிக்குங்க என்று சொல்லி ஒரு தொகையை எஸ்ஏ சந்திரசேகருக்கு தந்திருக்கின்றனர். ஆனால் அப்போது அதற்காக சண்டை போட முடியவில்லை. கலைஞருக்கு நெருக்கமானவராக எஸ்ஏசி இருந்தார். நண்பராகவும் இருந்தார். அந்த சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் அமைதியாக அவர் இருந்துவிட்டார்.

இதையடுத்து சுறா படம் சரியாக போகாததால் நஷ்ட ஈடு கேட்டு வினியோகஸ்தர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியிருக்கின்றனர். ஆனால் படத்தை தயாரித்தது விஜய் அப்பா தான் என்று கூறி அவரிடம் போய் கேளுங்கள் என்று கூறிவிட்டனர். இதுவும் எஸ்ஏசி தரப்பில் அதிருப்தியை தந்தது. அடுத்து விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் சன் பிக்சர்ஸ் தரப்பில் ஏதேனும் ஒரு குடைச்சல் தருவது வழக்கமாக இருந்தது. இதுதான் திமுகவுடன் விஜய் மோத முக்கிய முதல் காரணம் என்று அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்