- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் மூன்றாவது சிங்கிள் ஜுஜுபி மேட்டர்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியானது மாஸ் அப்டேட்

ஜெயிலர் மூன்றாவது சிங்கிள் ஜுஜுபி மேட்டர்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியானது மாஸ் அப்டேட்

- Advertisement -

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவருடன் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என பெரும் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. இவர்கள் தவிர யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, கலக்கப்போவது யாரு பாலா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

ஜெயிலர் படத்தின் மீது ரஜினி ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். இந்தப் படம் மெகா ஹிட்டாகி தலைவர் ஃபுல் பார்மில் கம்பேக் கொடுப்பார். அப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எல்லாம் எழாது. ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும்தான் என்பதை அனைவரும் உணர்வார்க என இப்போதே சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

- Advertisement -

படத்திலிருந்து காவாலா மற்றும் ஹுக்கும் ஆகிய இரண்டு சிங்கிள்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. அவற்றில் காவாலா பாடல் வரவேற்பை பெற்றாலும் பாடலின் வரிகள் புரியவில்லை என்ற விமர்சனமும், பாடலில் ரஜினியை டம்மியாக்கிவிட்டார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது. இதனையடுத்து உடனடியாக ஹுக்கும் பாடல் வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் முழுக்க முழுக்க ரஜினிகாந்த்துக்காகவே எழுதப்பட்டது போல் வரிகள் இருந்தன.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜுஜுபி என்ற மூன்றாவது சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது சிங்கிள் போல் மூன்றாவது சிங்கிளிலும் தலைவரின் சம்பவம் இருக்கும் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக 1000 இலவச பாஸ்கள் ரசிகர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று அதற்கான முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய வெறும் பதினைந்தே நொடிகளில் 1000 பாஸ்களையும் ரசிகர்கள் பதிவு செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்