“கே.ஜி.எஃப்” வரிசை திரைப்படங்கள் ரசிகர்களிடையே எந்தளவுக்கு வரவேற்பை பெற்றது என்பதை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை. கன்னட சினிமாவின் மார்க்கெட்டை உலகளவில் கொண்டு சேர்த்த திரைப்படம் “கே.ஜி.எஃப்”. இத்திரைப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். இதில் யாஷ் ஏற்று நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் இந்திய சினிமா ரசிகர்களிடையே மிக பிரபலமான கதாபாத்திரமாக ஆகிப்போனது.

“கே.ஜி.எஃப்” முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து கடந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளிவந்தது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அசரவைக்கும் அளவுக்கு படமாக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து “கே.ஜி.எஃப்” மூன்றாம் பாகமும் வெளிவரவுள்ளது.
இதனிடையே “கே.ஜி.எஃப்” இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து “சலார்” என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். இத்திரைப்படம் தெலுங்கில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் இதில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

“சலார்” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்கையில் ஒரு ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. ஆங்காங்கே பாம் வெடிப்பது போல் காட்சிப்படுத்தப்படுகிறது. கிராபிக்ஸ் செய்யாமல் நிஜமாகவே ஒரு குண்டு வெடிப்பு காட்சியை நிகழ்த்துகிறார்கள். இதனை பார்க்கும்போதே இத்திரைப்படத்திற்கான ஆவல் கூடுகிறது. அந்த வீடியோ இதோ…
describe in one word #Prabhas #Salaar
Mine : vidhvamsam 🔥#SalaarTheSaga https://t.co/yYbZKCyMW1 pic.twitter.com/QHpKTfBgeK
— Prabhas Raju 🦁 (@salaarbhaii) June 21, 2023





