நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படமான “ஜெயிலர்” திரைப்படமானது வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது ஜூலை 28-ஆம் தேதி நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உட்பட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிராக்குகள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் வேளையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நாளை ஜூலை 28-ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வரும் வேளையில் நாளை முழுவதுமாக இந்த படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கின்றன. அதோடு இன்னும் ஜெயிலர் படம் வெளியாவதற்கு சில நாட்களே உள்ளதால் தற்போது ரஜினி ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை கொண்டாடத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் நாளை இந்த நிகழ்ச்சிக்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் தயாராகி வரும் வேளையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கான மின் அலங்கார விளக்குகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் மாலா (26 வயது) என்கிற இளைஞர் மின்சாரம் தாக்கி 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி வெளியாகி அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இசை வெளியீட்டு விழாவிற்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு வட மாநிலத்தை சேர்ந்த ஊழியர் அடிபட்டுள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில் இந்த விபத்தானது எவ்வாறு நடந்தது என்பது குறித்து பெரிய மேடு போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.





