- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் அஜீத்குமாருடன் நடிக்க வேண்டியது நான்தான், அதுக்காக நான் ஒண்ணும் வருத்தப்படலே - வெளிப்படையாக...

அந்த படத்தில் அஜீத்குமாருடன் நடிக்க வேண்டியது நான்தான், அதுக்காக நான் ஒண்ணும் வருத்தப்படலே – வெளிப்படையாக பேசிய நடிகை ரம்பா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நாயகியாக மனம் வலம் வந்தவர் நடிகை ரம்பா. நடிகர் பிரபு நடித்த உழவன் என்ற படத்தில் அறிமுக நாயகியாக ரம்பா நடித்து அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் தமிழில் நடித்து முன்னணி நடிகையாக அவர் மாறினார். குறிப்பாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் ரம்பா நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் உனக்காக எல்லாம் உனக்காக அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் காதலா காதலா சுந்தர புருஷன் செங்கோட்டை மின்சார கண்ணா பூமகள் ஊர்வலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர் அஜீத்குமார் உடன் ராசி என்ற படத்தில் ஜோடியாக ரம்பா நடித்திருந்தார்.

- Advertisement -

அதேபோல் நடிகை தேவயானியுடன் ரம்பா இணைந்து நடித்த படம் நினைத்தேன் வந்தாய். இந்த படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் முன்னணி நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாகவே நடித்தவர் ரம்பா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆன பிறகு நடிகை ரம்பா சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை.

திருமணத்துக்கு பிறகும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் ரம்பாவை தேடி வந்த போதும் அவர் மறுத்துவிட்டார். குடும்பம் கணவர் பிள்ளைகளை கவனிப்பது தான் எனக்கு முக்கியம். சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். ஆனால் இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் நடிகை ரம்பா இருந்து வருகிறார். சில இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

- Advertisement -

ஆனால் வாலி படத்தில் சிம்ரனுக்கு பதிலாக ரம்பா நடிக்க இருந்த தகவல் லேட்டஸ்ட் ஆக வெளியாகி உள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ரம்பா கூறியதாவது, முதலில் எஸ்ஜே சூர்யா வந்து என்னிடம் வாலி படத்தின் கதையை சொன்னார். வாலி படம் என்னுடைய முதல் படம். இதில் இப்படி எல்லாம் பண்ணப் போறேன் என்றும் சொன்னார். தேதி கால்ஷீட் அப்படி ஏதோ ஒரு காரணத்தால் அந்த படம் மிஸ் ஆகிடுச்சு.

அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்டுச்சு. அஜீத்துடன் நான் நடித்த நான் ராசி படத்துக்கு அப்புறம் அந்த படம் எடுத்தாங்க. ஆனால் வாலி படம் நான் பண்ண முடியலேன்னு நான் ஃபீலிங் பண்ணவே இல்லை. ஏன்னா, சிம்ரன் அந்த கேரக்டருக்கு மிக பொருத்தமான நடித்திருந்தார். சிம்ரன் மாதிரி நானும் பண்ண முடியாது என்று நடிகை ரம்பா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்