- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் படத்தில் ரஜினியையே மிரட்டிய வில்லன் நடிகர் விநாயகனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? -...

ஜெயிலர் படத்தில் ரஜினியையே மிரட்டிய வில்லன் நடிகர் விநாயகனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? – இவ்வளவு கம்மியா?

- Advertisement -

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிய “ஜெயிலர்” திரைப்படமானது தற்போது முதல் வாரத்தில் பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகவும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி என பல்வேறு நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அண்ணாத்த படத்தில் சறுக்கலை சந்தித்த ரஜினிகாந்த்திற்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ள இந்த ஜெயிலர் திரைப்படமானது பெரிய அளவில் வெற்றியை பெற்றதற்கு அவருடன் சேர்ந்து நடித்த மற்ற நடிகர்களின் அசத்தலான நடிப்பும் ஒரு காரணமாக இருந்தது.

- Advertisement -

குறிப்பாக ரஜினிக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விநாயகன் தனது மலையாளம் கலந்த தமிழில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வில்லனாக மிரட்டி இருந்தார். அவரது இந்த நடிப்பு அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

Vinayakan-1

ஏற்கனவே தமிழில் திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்த விநாயகன் “வர்மன்” என்கிற கதாபாத்திரத்தை ஏற்று ஜெயிலர் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது இந்த கேரக்டருக்காக வழங்கப்பட்ட சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த ஜெயிலர் படத்துக்காக அவர் 35 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

பெரிய மார்க்கெட் இல்லாததன் காரணமாகவே இவருக்கு கம்மியான சம்பளம் வழங்கப்பட்டதாகவும், ரஜினிக்கு எதிராக இப்படி ஒரு அசத்தலான கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு இவ்வளவு குறைவான சம்பளமா வழங்கப்பட்டுள்ளது? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் ஜெயிலர் படத்தில் பெற்ற வெற்றிக்கு பின்னர் இனிவரும் படங்களில் அவர் ஒரு கோடி சம்பளம் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்